Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரா எடப்பாடி வீட்டுக்கே போன சுதீஷ்.. இந்த 5 தொகுதிகள் எங்களுக்கு வேணும்.. பட்டென சொன்ன பட்டியல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆலோசனை நடத்தியுள்ளார். தேமுதிகவுக்கு இந்த 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27. மார்ச் 28ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

LK Sudhish meets AIADMK chief Edappadi palanisamy after EPS said 5 seats for dmdk

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் இன்று அறிவித்துவிட்டது. அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

வடசென்னை - ராயபுரம் மனோ

தென்சென்னை - ஜெயவர்த்தன்

காஞ்சிபுரம் - ராஜசேகர்

அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்

கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்

ஆரணி - கஜேந்திரன்

விழுப்புரம் - பாக்யராஜ்

சேலம் - விக்னேஷ்

நாமக்கல் - தமிழ்மணி

ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்

கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்

சிதம்பரம் - சந்திரஹாசன்

நாகை - சுர்ஜித் சங்கர்

மதுரை - சரவணன்

தேனி - நாராயணசாமி

ராமநாதபுரம் - ஜெயபெருமாள்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேமுதிகவுக்கு 5 சீட்: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார். தேமுதிகவுக்கு விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலுார், மத்திய சென்னை, திருச்சி அல்லது மயிலாடுதுறை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு பெற்றார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன். பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் கள்ளக்குறிச்சியில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். இதன் மூலம், அவர்கள் இருவரும் விருதுநகர், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவது உறுதி எனத் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சுதீஷ்: இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ். தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ நல்ல தம்பி ஆகியோரும் சுதீஷ் உடன் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர்.

தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து சுதீஷ் பேசி இருப்பதாகத் தெரிகிறது. தேமுதிகவுக்கு விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலுார், திருச்சி, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளை ஒதுக்க சுதீஷ் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+