Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளாட்சித் தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய லீவு : தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு

தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளன்று அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதனை முறையாக பின்பற்றாவிடில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில் முதல்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போட சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு உதவியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Local body Election: Paid Leave on Local body Election Day: Notice of the Assistant Commissioner of workers

அதன்படி, வரும் 5ஆம் தேதியும், 8ஆம் தேதியும் சென்னையில் இருந்து ஒன்பது மாவட்டங்களுக்கும் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று ஓட்டுப் போட ஏதுவாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், அனைத்து கடைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். இதனை முறையாக பின்பற்றாவிடில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அலுவலகங்கள் மூலம் தேர்தல் நாட்களில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து கட்டுப்பாட்டு அறை அலுவலர்களுக்கு கைபேசி மற்றும் அலுவலக தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பா.லிங்கேஸ்வரன் - தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), காஞ்சிபுரம் - 87786 19552
அலுவலக தொலைபேசி - 044 27237010
தி.கமலா - தொழிலாளர் துணை ஆய்வர், காஞ்சிபுரம் - 99526 39441
பா.மாலா - தொழிலாளர் உதவி ஆய்வர், பரங்கிமலை - 94441 52829
சி.த.வெங்கடாசலம் - முத்திரை ஆய்வர், காஞ்சிபுரம் - 94440 62023

செங்கல்பட்டு மாவட்டம்

மனோஜ் ஷியாம் சங்கர் - தொழிலாளர் துணை ஆய்வர், பரங்கிமலை - 86675 70609
ஆர்.பிரபாகரன் - தொழிலாளர் உதவி ஆய்வர், செங்கல்பட்டு - 99442 14854
த.பின்னிவளவன் - தொழிலாளர் உதவி ஆய்வர், மதுராந்தகம் - 97892 53410

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+