மாஸ்டர்பிளான்.. எடப்பாடிக்கு எதிராக சீறிய ராமதாஸ்.. 7 மாவட்டங்களுக்கு பாமக குறி.. அதிமுகவிற்கு செக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்களுக்கு பாமக குறி வைத்துள்ளதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. பாமக வலுவாக இருக்கும் மாவட்டங்களில் அதிமுக தயவு இன்றியே வெற்றிபெறும் திட்டத்தில் அக்கட்சி உள்ளதோ என்ற கேள்விகள் எழ தொடங்கி உள்ளன.

பாமக அதிமுக கூட்டணி அதிகாரபூர்வமாக முறிந்துவிட்டது. சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல்களை ஒன்றாக எதிர்கொண்ட அதிமுக பாமக கூட்டணி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக முறிந்துள்ளது. நேற்று பாமக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தனித்து போட்டியிடுவது என்று உறுதி செய்யப்பட்டது.

பாமகவின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இதுதான் உதவும், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர், இந்த காரணத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாமக நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று பாமக தெரிவித்துள்ளது.

அதிமுக பாமக பேச்சுவார்த்தை

அதிமுக பாமக பேச்சுவார்த்தை

பாமக அதிமுக இடையே கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படாமல் இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி பிளவு பாமகவிற்கு பெரிய அளவில் உதவும் என்று கூறப்படுகிறது. களநிலவரங்களை கணித்தே பாமக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடக்க உள்ளது. இதில் 7 மாவட்டங்களில் பாமக கொஞ்சம் வலுவாக இருக்கிறது.

பாமகவின் வலுவான 7 மாவட்டங்கள்

பாமகவின் வலுவான 7 மாவட்டங்கள்

நெல்லை, தென்காசி தவிர்த்து காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பாமக வலுவான கட்சிதான். இங்கு கணிசமான வன்னியர் வாக்குகள் உள்ளன. முக்கியமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரத்தின் சில பகுதிகளில் பாமக மிகவும் வலுவான கட்சியாக இருக்கிறது. இங்கு உள்ள வன்னியர் வாக்குகளை பெறும் திட்டத்தில் 7 மாவட்டங்களுக்கு குறி வைத்து பாமக தனித்து களமிறங்கி உள்ளது.

Recommended Video

    தோளில் இருக்கும் துண்டு போலதான் கூட்டணி! தேவை இல்லையெனில் கழற்றி வைத்துவிடலாம் - செல்லூர் ராஜு
     அதிமுக பாஜக கூட்டணி

    அதிமுக பாஜக கூட்டணி

    அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அது தங்களுக்கான வாக்கு வங்கியை சரிக்கும் வாய்ப்பு உள்ளது. தனித்து போட்டியிட்டால் அதிக வாக்குகளை பெறலாம். அதிமுக, பாஜக மீது உள்ள அதிருப்தியை நாமும் சம்பாதிக்க கூடாது. அவர்களால் நாமும் வாக்குகளை இழந்து காணாமல் போய்விட கூடாது என்று அஞ்சி பாமக இப்படி மாஸ்டர் பிளான் போட்டு இருப்பதாக தெரிகிறது. வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தலில் முறையாக செயலாற்ற வேண்டும். அப்போதுதான் அடிமட்ட லெவலில் கட்சி வலுவாக இருக்கும். இதன் காரணமாகவே திட்டமிட்டு தாங்கள் வலுவாக இருக்கும் வட மாவட்டங்களில் மீண்டும் பழைய வாக்கு வங்கியை மீட்டு எடுக்க பாமக முயல்கிறது .

    பாமகவின் திட்டம்

    பாமகவின் திட்டம்

    எப்போதும் தனித்து நிற்போம்,தனித்து நிற்போம் என்று சொல்லும் பாமக முதல்முறை இப்படி தனித்து நின்று டிரையல் அண்ட் எரர் சோதனை செய்ய இருக்கிறது. தங்களுக்கான நேரடி வாக்குகள் எவ்வளவு என்று சோதிக்க உள்ளது. எதிர்கால கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பாமகவிற்கு இந்த முடிவு ஒரு வகையில் சாதகமாக இருக்கும். இப்போது பெறும் வாக்கு வங்கியை வைத்து எதிர்காலத்தில் வேறு கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிக இடங்களை வடமாவட்டங்களில் பாமக பெற முடியும். இதெல்லாம் போக அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட சில ஏமாற்றமும் கூட பாமகவின் இந்த முடிவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    அதிமுக பாமக உரசல்

    அதிமுக பாமக உரசல்

    சட்டசபை தேர்தலின் போதே அதிமுக தலைவர்கள் சிலர் பாமக போட்டியிடும் தொகுதிகளில் சரியாக வேலை செய்யவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் வேலை செய்வதில்லை, பாமக அதிமுகவிற்கு உதவுவது போல, அதிமுக பாமகவுக்கு உதவவில்லை என்று பாமக தலைவர்கள், நிர்வாகிகள் சட்டசபை தேர்தலின் போதே அதிமுகவிடம் கடிந்து கொண்டனர். தற்போது இதே விஷயத்தை காரணம் காட்டி ராமதாஸ் அதிமுகவை விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளை எடப்பாடி "கண்ட்ரோல்" செய்யவில்லை என்று ராமதாஸ் வெளிப்படையாக குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

    தர்மம்

    தர்மம்

    கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. அதிமுகவிற்கு ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. இதனால் தேர்தல் நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நிர்வாகிகளை சரியாக கட்டுப்படுத்த எடப்பாடிக்கு தெரியவில்லை. இதனால் எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதில் பலன் இல்லை என்று கூறி ராமதாஸ் அதிமுகவுடனான கூட்டணியை விமர்சனம் செய்துள்ளார். எடப்பாடியை வெளிப்படையாக விமர்சனம் செய்துவிட்டு ராமதாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார்.

    உடைந்தது

    உடைந்தது

    அதிமுக பாமக கூட்டணி முறிவு காரணமாக வட மாவட்டங்களில் இந்த முறை கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியின் தனிப்பட்ட பலம் என்ன என்பதை இந்த தேர்தலில் கண்டிப்பாக தெரிந்துவிடும். அதிமுக பாஜக கூட்டணி ஒரு பக்கம், வலிமையான பாமக ஒரு பக்கம், ஆளும் கட்சியான திமுக கூட்டணி ஒரு பக்கம் என்று கடும் போட்டிகள் இங்கே காணப்படும். தேமுதிக, அமமுக நிலைப்பாடு இனிதான் தெரியவரும். பாமகவின் இந்த திடீர் முடிவு விறுவிறுப்பின்றி சென்று கொண்டு இருந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+