Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 பெரிய சிக்கல்கள், 3 பெரும் சவால்கள்: வேகம் காட்டும் ஸ்டாலின்- எடப்பாடிக்கு ஆகப்பெரும் அக்னீபரீட்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் அதிமுக கட்சிக்கு முன் பல சவால்களும், சிக்கலும் உள்ளன. இந்த தேர்தல் அக்கட்சிக்கு மிகப்பெரிய அக்னீபரீட்சையாக மாறியுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

தேர்தலில் தோல்வி அடைந்து அதிமுகவிற்கு இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தொண்டர்கள் மத்தியிலும், கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் கட்சியின் மதிப்பை மீட்டு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எதிர்கொண்டு இருக்கும் சவால்களும், சிக்கல்களும் என்னென்ன என்று பார்க்கலாம்.

சிக்கல் 1 : கோடநாடு

சிக்கல் 1 : கோடநாடு

அதிமுகவிற்கு இருக்கும் முதல் சிக்கல், பெரிய சிக்கல் என்று பார்த்தால் அது கோடநாடு வழக்குதான். 2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இதில் தமிழ்நாடு அரசு மேல் விசாரணை நடத்தி வருகிறது. இதில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வந்துள்ள நிலையில் விசாரணை சூடு பிடித்துள்ளது. அதிமுகவிற்கு இது ஆகப்பெரிய தலைவலியாக உருவெடுத்து இருக்கிறது. மொத்த அதிமுகவையும் இந்த வழக்கு பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளி உள்ளது. அதிமுகவிற்கு ஆளும் திமுக தரப்பு வைத்த செக் போலத்தான் இந்த வழக்கு பார்க்கப்படுகிறது. திமுக பிரச்சாரங்களில் கண்டிப்பாக கோடநாடு வழக்கு முக்கியமான அங்கம் வகிக்க போகிறது. கோடநாடு வழக்கில் அதிமுக கொதிப்பிலும் பதற்றத்திலும் இருப்பது சட்டசபை புறக்கணிப்பு தொடங்கி தொடர் பேட்டிகள் வரை பலவற்றில் தெளிவாக தெரிகிறது. கண்டிப்பாக அதிமுகவின் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் இந்த வழக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வழக்கு ஒரு வகையில் அழுத்தம் கொடுக்கும்.

சிக்கல் 2: பல்வேறு வழக்குகள்

சிக்கல் 2: பல்வேறு வழக்குகள்

கோடநாடு வழக்கு போக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு எதிராக ஆளும் கட்சி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. ராஜேந்திர பாலாஜி சொத்துகுவிப்பு வழக்கு, எஸ்பி வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு, அவரின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டுகள், பொள்ளாச்சி வழக்கில் அதிகரிக்கும் கவனம், சென்னையில் குடிசை மாற்று வாரிய கட்டிடங்களில் செய்யப்பட்ட முறைகேடுகள், இதில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்று ஒவ்வொரு முன்னாள் அமைச்சர்களுக்கும் எதிராக பல கேஸ்கள், விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மனரீதியாக அதிமுகவின் தேர்தல் பணிகளை இது பெரிய அளவில் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமைச்சர்கள் தேர்தல் மீது கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தும்.

சிக்கல் 3 : கூட்டணி

சிக்கல் 3 : கூட்டணி

மூன்றாவதாக அதிமுகவின் கூட்டணி கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் அந்த கட்சிக்கு வாக்கு ரீதியாக உதவி செய்யுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. பாஜகவிற்கு எதிரான சமீபத்திய சில வீடியோ சர்ச்சைகள் உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுகவிற்கு எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளது. பாமகவுடன் அதிமுக வைத்திருக்கும் கூட்டணி வடமாவட்டங்களில் அக்கட்சிக்கு உதவினாலும் பெரிய அளவில் வெற்றியை இது தீர்மானிக்குமா என்பது சந்தேகம்தான். பாமகவின் கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் இன்னும் தென் மாவட்டங்களில் சர்ச்சையாக உள்ளது. இதனால் நெல்லை, தென்காசி உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு இது எதிராக திரும்பும் வாய்ப்புகளும் உள்ளன.

 சிக்கல் 4 : உட்கட்சி பூசல்

சிக்கல் 4 : உட்கட்சி பூசல்

இது போக கட்சிக்கு உள்ளேயே அதிமுகவில் நிறைய பூசல் உள்ளது. கட்சிக்கு உள்ளேயே நிர்வாகிகள் பல்வேறு ஈகோ யுத்தங்கள் காரணமாக பிரிந்து கிடக்கிறார்கள். வெளியே ஒற்றுமையாக இருந்தாலும் உள்ளே கட்டுப்பாடு இல்லை. இது தேர்தல் நேரத்தில் பணிகளை மேற்கொள்வதில் அதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தும். யார் சொல்வதை கேட்பது, யாருக்காக பணிகளை செய்வது, போஸ்டரில் யார் புகைப்படங்களை வைப்பது என்று பல விஷயங்களில் அதிமுகவிற்கு இது பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

சவால் 1 : மாவட்டங்கள்

சவால் 1 : மாவட்டங்கள்

இது போக வேறு சில சவால்களும் அக்கட்சி உள்ளது. தற்போது தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் திமுகதான் வலிமையாக இருக்கிறது. இங்கு திமுக நிர்வாகிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். திமுகவின் ஸ்டிராங் சோன் இது என்பதால் இங்கு அதிமுக தேர்தல் பணிகளை மேற்கொள்வதும், ஆளும் கட்சியை எதிர்த்து வெற்றி கொள்வதும் கொஞ்சம் சவாலான காரியம். இதை அதிமுக எப்படி செய்ய போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

சவால் 2: எடப்பாடி மதிப்பு

சவால் 2: எடப்பாடி மதிப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட வகையில் இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் ஒரு அக்னி பரீட்சை. தனிப்பட்ட வகையில் தன்னுடைய ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. கட்சி நிர்வாகிகள் மீதான வழக்குகள், பல்வேறு நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுவது, கட்சிக்கு உள்ளேயே இருக்கும் சில எதிர்ப்புகள், சசிகலா எதிர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எதிராக கட்சியை உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வைக்க வேண்டிய சவால் எடப்பாடி பழனிசாமிக்கு முன் இருக்கிறது. ஆளும் கட்சியாக தேர்தலை சந்திப்பதற்கும், எதிர்க்கட்சியாக தேர்தலை சந்திப்பதற்கும் நிறைய வேறு இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி எப்படி தேர்தலை சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சவால் 4: ஆட்சி நல்ல மதிப்பு

சவால் 4: ஆட்சி நல்ல மதிப்பு

இதெல்லாம் போக திமுகவின் கடந்த மூன்று மாத ஆட்சிக்கு எதிராக பெரிய அதிருப்தி இல்லை. தேர்தல் பணிகளிலும் அக்கட்சி வேகம் காட்டி வருகிறது. பல்வேறு நலத்திட்டங்கள், அறிவிப்புகள் மூலம் திமுக பெரிய அளவில் ஸ்கோர் செய்துவிட்டது. கொரோனா கட்டுப்பாடு, பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கான இலவச மாநகர பேருந்து பயணம் உள்ளிட்ட பல விஷயங்கள் திமுகவிற்கு ஆதரவாக உள்ளது. சில வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றாத நிலையில் அதிமுக எதை சொல்லி பிரச்சாரம் மேற்கொள்ளும், எதை சொல்லி வாக்கு கேட்கும் என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. இது அக்கட்சிக்கு இந்த தேர்தலில் வியூகம் வகுப்பதில் நிறைய சவால்களை கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+