உள்ளாட்சி தேர்தல்: ரஜினிகாந்த் படம், ரசிகர் மன்ற கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரிக்க தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் பெயர், படம் மற்றும் ரசிகர் மன்ற கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியோ, ரஜினிகாந்த் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சுதாகர் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications