உள்ளாட்சித் தேர்தல்… மே 31ஆம் தேதிக்குள் அறிவிப்பாணை… மாநில தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை மே 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் அது தொடர்பான அறிவிப்பாணையை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிடவும் உத்தரவிட்டு இருந்தது உயர்நீதிமன்றம்.

இந்த உத்தரவை நிறைவேற்றத் தவறிய மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் மற்றும் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் டி.எஸ் ராஜசேகர் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை மே 31 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் 2016 அக்டோபரில் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு இருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications