ஆச்சரியம்.. ஆனால் உண்மை.. ஒரே மேடையில் திமுக - பாமக கை கோர்ப்பு.. சென்னை அருகே பரபரப்பு
ஒரே மேடையில் திமுக, பாமகவினர் கை கோர்த்தனர்
சென்னை: சென்னை அருகே நடந்த கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும், திமுகவும் ஒன்றாக ஒரே மேடையில் கைகோர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்று வருகின்றனர்.. அதன்படி, பூந்தமல்லி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர்களும் பதவி ஏற்றனர்.
பூந்தமல்லி ஒன்றியத்தில் மொத்தம் 28 கிராம ஊராட்சிகளும்,15 ஒன்றிய வார்டுகளும் உள்ளன.. இதில் 28 கிராம ஊராட்சிகளிலும் திமுகவின் அமோக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

திமுக
அதேபோல் ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் 10 திமுகவும், 3 இடங்களில் அதிமுக மற்றும் 1 பாமக, 1 சுயேட்சை வெற்றி பெற்றனர். இதில் 10 இடங்களில் வெற்றி பெற்ற திமுக பூந்தமல்லி ஒன்றியத்தை கைப்பற்றி உள்ளது..

பூந்தமல்லி ஒன்றியம்
அதனால், வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் 10 பேரும் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். அதிமுகவிடம் இருந்த ஒன்றிய சேர்மன் பதவிகளை திமுக கைப்பற்றிய நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் மதியத்திற்கு மேல் பதவி ஏற்று கொள்ள முடிவு செய்தனர்.

கவுன்சிலர்கள்
மேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக ஒன்றிய கவுன்சிலரும் அதிமுகவுடன் பதவி ஏற்று கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென திமுக கவுன்சிலர்களுடன் கை கோர்த்து பாமக கவுன்சிலர் பதவி ஏற்றுக்கொண்டார். அதிமுகவின் வெற்றி நிலை மாறியவுடன் பாமக உடனே திமுகவுடன் கை கோர்த்துள்ளது என்று சலசலக்கப்பட்டு வருகிறது.

அதிருப்தி
அதே சமயம், இது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றும், அல்லது தேர்தல் ஆணைய இணையதளத்தில் பாமக பெயர் இடம் பெறாத அதிருப்தியிலும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.. எப்படியாயினும் திமுகவுடன் பாமக கைகோர்த்த இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications