4 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை.. அய்யா வைகுண்டர் அவதார நாள்.. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குஷி
சென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு, இன்று மார்ச் 4ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஆண்டுதோறும் மிகுந்த பக்தி உணர்வுடன் கொண்டாடப்படும் இந்த தினத்தையொட்டி 4 மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு சாமித்தோப்பு தலைமை பதி உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதனால் பொதுமக்களின் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள், ஆன்மிக ஊர்வலங்கள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர். தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அத்தியாவசிய பணிகள்/ பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. அவசர சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பொதுத்தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. பொதுமக்கள் தேவையற்ற நெரிசலைத் தவிர்த்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.3.2026 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென் தமிழகத்தில் ஆன்மீன நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications