ஹை ஜாலி.. இந்த ஊர்களில் இன்று விடுமுறை.. அரசு ஊழியர்களுக்கு வந்த அறிவிப்பு! இதுக்காக தான் லீவா?
சென்னை: தமிழகத்தில் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது இரு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையானது அளிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த ஊர்களில் விடுமுறை எதற்காக விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்..
தமிழகத்தில் தேர்வுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது.

விடுமுறை காரணமாக பொதுமக்கள் பலரும் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.
தற்போது கொடைக்கானல் ஊட்டி போன்ற பகுதிகளுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஊட்டி கொடைக்கானலில் கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று உதகையில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி நடக்கிறது. பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை பார்ப்பதற்காக மக்கள் அதிக அளவில் திரள்வார்கள் அந்த வகையில் ஊட்டியில் 126வது மலர் கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி இருபதாம் தேதி வரை இந்த மலர் கண்காட்சியானது நடக்க இருக்கிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் தொடக்க இருக்கிறது. மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று 126 வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 18-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகும்” என அறிவித்திருக்கிறார்
இதேபோல தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கோயில் சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி தொடங்கி நிலையில் மே 14ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் தொடங்குகிறது. நாளை, நாளை மறுநாள் ரத ஊர்வலம் நடக்க இருக்கும் நிலையில் தேரோட்டத்தையொட்டி இன்று உள்ளூர் முறை விடுமுறையை தேனி மாவட்ட ஆசிரியர் சஜீவனா அறிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications