"டமார்".. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. ஏன்?
எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருக்கிறாராம்
சென்னை: யோசிச்சு யோசிச்சு கூட்டணி வைத்து, பார்த்து பார்த்து சீட் ஒதுக்கி, கடைசியில் இப்படி நன்றி இல்லாமல் செய்து விட்டார்களே என்று செம அப்செட்டில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், டாக்டர் ராமதாஸ் இவருக்கு மேல் அப்செட்டில் இருக்கிறாராம்.. இப்படி ஒரு தகவல் கசிந்து வருகிறது.
இந்த முறை அதிமுகவில், பாஜகதான் முதலில் கூட்டணிக்கு அச்சாரம் போட்டது.. கிட்டத்தட்ட 6 மாதம் காலம் கழித்துதான், அவர்கள் கூட்டணியிலேயே இடம்பெற்றனர்.. மேலிட தலைவர்கள் வந்து போன பிறகுதான் 20 சீட்டும் ஓகே ஆனது.
அதேபோல, கடைசியாக கூட்டணி வைத்தது பாமகதான்.. இடஒதுக்கீடு சம்பந்தமாக ராமதாஸ், பிடிவாதம் பிடிப்பதிலும், அது தொடர்பான போராட்டங்களை முன்னெப்படுப்பதிலும் தீவிரமாக இருந்தார்..

இடஒதுக்கீடு
இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானதுதான் என்று ஆர்பி உதயகுமார், முதல் ஓபிஎஸ் வரை தென்மாவட்டங்களில் சொல்லி பார்த்தனர்.. ஆனால், யாருமே நம்பவில்லை.. இதனால் தென் பகுதியில் வாக்கு வங்கி குறைந்தது.. அதிகம் எதிர்பார்த்த வடமாவட்டமும் சறுக்கிவிட்டது.. அந்த அளவுக்கு இந்த இடஒதுக்கீடு விவகாரம் அதிமுகவுக்கு பெரிய மைனசாக இருந்தது..

இடஒதுக்கீடு
தேர்தல் தோல்விக்கும் இதே காரணம்தான் அரசியல் நோக்கர்களும் சொல்லி இருந்தனர்.. "இதுக்கு பேசாமல் பாமகவுடன் கூட்டணி வைக்காமலேயே இருந்திருக்கலாமே, இதெல்லாம் தேவையா? இடஒதுக்கீடு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அதிமுகவுக்கு பல சாதி சமுதாய ஓட்டுக்கள் விழுந்திருக்குமே" என்று சிலர் நேரடி விமர்சனத்தையும் முன்வைத்திருந்தனர். எனவே, இதுதொடர்பான வருத்தமும் அதிமுக தலைமைக்கு இருக்கவே செய்கிறது.

வாழ்த்து
இப்போது விஷயம் என்னவென்றால், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமிக்கு, ராமதாஸ், உடனடியாக ட்வீட் போட்டு வாழ்த்து சொல்லிவிட்டார். ஆனால், பாமகவில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், யாரும் வாழ்த்து சொல்லவே இல்லையாம்.. மே 13-வரை அவரை சந்திக்காமலும், வாழ்த்து தெரிவிக்காமலும் இருந்துள்ளனர்.. இதற்கு காரணம், அதிமுகவின் வாக்குகள் முழுவதுமாக பாமகவுக்கு இந்த முறை டிரான்ஸ்பர் ஆகவில்லையாம்..

வருத்தம்
இதுதான் ராமதாஸுக்கும் வருத்தமான விஷயமாக இருக்கிறதாம்.. ஆனால், பாஜக எம்எல்ஏக்கள் வாழ்த்து சொல்லிய நிலையில், பாமக எம்எல்எக்களின் இந்த செயல்பாடுதான், எடப்பாடி பழனிசாமிக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளதாம். இவர்களால்தான் தோற்று போனோம் என்று அதிமுக தலைமை கருதுகிறது.. இவர்களால்தான் தங்களுக்கு பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை என்று பாமக கருதுகிறது.. உண்மையில், இதில் நியாயமான வருத்தம் யாருக்கு?
-
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications