அமலுக்கு வரும் தளர்வு.. தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் இன்று முதல் திறக்கப்படும் சலூன்கள்!
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இன்றில் இருந்து கடைகள் திறக்கப்பட உள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இன்றில் இருந்து கடைகள் திறக்கப்பட உள்ளது.
இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுக்க பாதிப்பு 1 லட்சத்து 300ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் 11760 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்தியா முழுக்க மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்று லாக்டவுன்களை தொடர்ந்து நாடு முழுக்க லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய லாக்டவுன் 4.0 மூலம் நாடு முழுக்க பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் இன்றில் இருந்து கடைகள் திறக்கப்பட உள்ளது. தற்போது, முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் சென்னையில் சலூன் கடைகள் எதுவும் இயங்காது. அதேபோல் தமிழகம் முழுக்க இருக்கும் மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சலூன் கடைகள் எதுவும் இயங்காது. இந்த சலூன் கடைகளுக்கு தீவிரமான கட்டுப்பாடுகளை அரசு விதித்து இருக்கிறது. சலூன் கடைகளில் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். ஐந்து முறை கிருமி நாசினி கொண்டு சலூன் கடைகளை கழுவ வேண்டும் .
பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் இடையே சமூக இடைவெளி விடுவது அவசியம். பணியாளர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். அதேபோல் எல்லோரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். மேலும் பணியாளர்கள் கையுறை அணிந்து இருக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications