போட்டாச்சு லாக்டவுன்.. வந்தாச்சு ஆம்னி.. பகல் நேரங்களில் "எக்ஸ்ட்ரா".. வெளியானது அறிவிப்பு..!
இரவு நேர ஊடங்கு காரணமாக, பகலில் ஆம்னி பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளனர்
சென்னை: இரவு நேர லாக்டவுன் அமலுக்கு வர உள்ள நிலையில், பகல் நேரத்தில் கூடுதல் ஆம்னி பஸ்களை இயக்க முடிவாகி உள்ளது.. இதற்கான அறிவிப்பை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.. இந்த தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆனாலும் முடியவில்லை.. ஒருநாளைக்கு பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டுகிறது.. எனவே, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலுக்கு வர உள்ளது.

அனுமதி
இந்த இரவு நேர லாக்டவுனை பொறுத்தவரை, தனியார், பொது போக்குவரத்து, ஆட்டோ, மற்றும் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது.. அதேபோல, வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை விதிக்கப்பட்டுள்ளது... அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

பகல் நேரம்
இதனால் ஆம்னி பஸ்கள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.. வழக்கமாக ஆம்னி பஸ்கள் என்றாலே நைட் நேரத்தில்தான் கிளம்பும்.. மிக தொலைவில் உள்ள ஊர்களுக்கு இந்த ஆம்னி பஸ்களையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.. ஆனால், தற்போது லாக்டவுன் விதி அமலில் உள்ளதால், நைட் நேரத்தில் பஸ்களை இயக்குவதற்கு பதிலாக பகல் நேரத்தில் பஸ்களை கூடுதலாக இயக்க முடிவாகி உள்ளது.

அறிவிப்பு
ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் இந்த அதிரடியை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, கொரோனா பரவாத வண்ணம் ஒவ்வொரு முறையும் பகலில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில், ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி தெளிக்கப்படும்... ஆம்னி பஸ்களை காக்க 6 மாதங்களுக்கு 50% சாலை வரியை மட்டும் வசூலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நஷ்டம்
கடந்த வருடம் முழுவதும், இப்படித்தான் தமிழகத்தில் லாக்டவுன் போடப்பட்டபோது, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.. பஸ்களை இயக்கவே முடியாத சூழல் ஏற்பட்டது.. இதனால் 480 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் சொல்லப்பட்டது.

விதிமுறைகள்
அதுமட்டுமல்ல, இந்த ஆம்னி பஸ்ஸை நம்பி, கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் உள்ளனர்.. வேலை இல்லாத சூழலில் அவர்களின் குடும்பங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டது.. இப்போதும் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அப்படி ஒரு நிலைமையே உருவாகி இருக்கிறது.. எனினும் இந்த தொழிலை சரிக்கட்டவும், அதேநேரத்தில், கொரோனா விதிகளை பின்பற்றி பஸ்களை இயக்கவும் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications