2-வதாக வாக்கப்பட்ட அலி.. நெருங்காமல் தவிர்த்த மனைவி.. ஜன்னல் வழியாக தீ வைத்து கொளுத்தி.. சென்னை ஷாக்
சென்னையில் மனைவி, மகனை எரித்து கொன்ற கணவரை தேடி வருகிறார்கள்
சென்னை: 2வதாக வாக்கப்பட்ட மக்புல் அலி-க்கு மனைவி பேகம் மீது ஏகப்பட்ட சந்தேகம்.. தன்னை வீட்டுக்குள் சேர்க்காததால், ஆத்திரமான அலி, ஜன்னல் வழியாக தின்னரை ஊற்றி மனைவியுடன் சேர்த்து, மகன், மகளுக்கும் தீ வைத்து எரித்துவிட்டார்.. இந்த பயங்கர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை புளியம்பேடு பகுதியை சேர்ந்தவர் மக்புல் அலி.. இவரது மனைவி கொரோசா பேகம்.. 2 பேருக்குமே 40 வயதாகிறது. கொரோசா பேகத்துக்கு ஏற்கனவே கல்யாணமாகி 21 வயது மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள்.

4 வருஷத்துக்கு முன்புதான் அலி, பேகத்தை 2வது கல்யாணம் செய்து கொண்டார்.. பிறகு கொல்கத்தாவில் இருந்து குடும்பத்தை சென்னைக்கு அழைத்து வந்தார்.. மதுரவாயலில் குடியேறினார்கள்.. தம்பதியும், மகனும், வேலப்பன்சாவடியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அலி சரியாக வேலைக்கு போவதில்லை.. குடிப்பழக்கம் வேறு சேர்ந்து கொண்டது.. தண்ணி அடித்துவிட்டு, பேகம் மீது சந்தேகப்படுவதே இவருக்கு வேலையாகிவிட்டது. அதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டையும், தகராறும் வந்துள்ளது.
இதனால் ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த பேகம், கணவர் அலியை வீட்டுக்குள் சேர்க்காமல் இருந்துள்ளார்.. 2 மாசமாகவே வீட்டுக்குள் அவரை அனுமதிக்கவில்லை.. இதனால், அலி, 2 மாதமாகவும் சண்டைதான் போட்டு வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்துவிட்டார்.. நேற்று காற்றோட்டத்துக்காக வீட்டின் ஜன்னல் பக்கத்தில் மனைவி, மகன், மகள் எல்லாரும் தூங்கி கொண்டிருந்தபோது அங்கே வந்தார்.. ஜன்னல் வழியாக தின்னர் என்ற எரிபொருளை 3 பேர் மீதும் ஊற்றி, தீயையும் வைத்து கொளுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, அவர்களை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பேகம், மகன் அக்ரம் அலி 13 வயது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.. இந்த சம்பவம் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அலியை தேடி வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications