என்னடா பண்றீங்க.. ஜாலியா இருங்க.. பேபி வேண்டாமே.. கலாய்க்கும் புஷ்பவனம் குப்புசாமி மகள்!
புஷ்பவனம் குப்புசாமி மகள் டாக்டர் பல்லவி ட்வீட் போட்டு அறிவுறுத்தி உள்ளார்
சென்னை: "வீட்டில் பாதுகாப்பாக இருங்க.. நிறைய லவ் பண்ணுங்க நோ பேபி... நிறைய pregnant patient வர்றாங்க.. என்னடா பண்றீங்க" என்று புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவி அகர்வால் கிண்டலாக ஒரு பதிவு போட்டுள்ளார்.
நாடு முழுதும் லாக்டவுனில் உள்ளது.. ஊரடங்கு உத்தரவையும் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.. எனினும் வெளிநாடுகளில் பரவ தொடங்கிய கொரோனாவைரஸ், மெல்ல ஊடுருவி இந்தியாவிற்குள் நுழைந்து, தமிழகத்தையும் அசைத்து பார்த்து வருகிறது.

144 தடை உத்தரவுப்படி மக்களும் வெளியே தலைகாட்டாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.. குறிப்பாக குடும்ப உறுப்பினர்களிடம் நெருங்கி பழகி பாசத்தை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நாட்டுப்புற பின்னணி கலைஞர்கள் அனிதா-புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டுள்ளார்.. இவர் ஒரு டாக்டர் ஆவார். தற்போது கொரோனா பாதிப்பால் சாதாரண உடல் நல குறைபாடுகளால் டாக்டர்கள் இல்லாமல் மக்கள் அவதிப்படாமல் இருப்பதற்காக, டாக்டர்கள் சிலருடன் இணைந்து ஜுரம், காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய சேவையை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் பணியாற்றி வரும் ஆஸ்பத்திரியில் தற்போது கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிகம் வருவதாக கூறியுள்ளார். இது சம்பந்தமாகத்தான் அந்த பதிவினையும் போட்டுள்ளார். அதில், "வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.. நிறைய லவ் பண்ணுங்க நோ பேபி... நிறைய pregnant patient வருகிறார்கள்.... என்னடா பண்றீங்க என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
Recommended Video

இதனை நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.. கூடவே மீம்ஸ்களையும் போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த கொரோனா வைரஸ்சால் ஆணுறையின் விற்பனை அதிகரித்து உள்ளது என்று ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது பெண்கள் கர்ப்பமாவதும் அதிகரித்துள்ளதுதான் விஷயமே! கொரோனா வைரஸைவிட காதல் வைரஸ் பயங்கரமா இருக்கே!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications