"ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனரா?" சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக்.. கண்ணீருடன் காத்திருந்த குடிமகன்கள்.. வீடியோ
டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் குடிமகன்கள் ஏமாற்றமடைந்தனர்
சென்னை: "ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனரா?" என்று போனை போட்டு டாஸ்மாக் முன்பு குடிமகன்கள் காத்திருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
45 நாள் கழித்து தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது.. குடிமகன்கள் விடிகாலையிலேயே கடைகள் முன்பு நிற்க தொடங்கிவிட்டனர்.. சரக்கு வாங்கி கொண்டு திரும்பும்போது அவர்களின் முகத்தில் மலர்ச்சியும், பூரிப்பும் தென்பட்டது.

ஒருசில இடங்களில் லேசான தடியடி உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்தன.. மண்டையில் ரத்தம் வழிந்தாலும், கையில் பாட்டிலுடன் சிரித்தபடியே வாங்கி கொண்டு வெளியே வந்தனர்.
3வது நாளே கோர்ட்- கேஸ் என்றாகிவிட்டது.. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளது.. இன்னொரு பக்கம், ஹைகோர்ட் உத்தரவை ஏற்று மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதை பார்த்த சில குடிமகன்கள் தலையில் இடி விழுந்ததுபோலாகிவிட்டது.. அரசு இனி எப்பவுமே கடையை மூடாது, திறந்தது திறந்ததுதான் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். ஆனால் கோர்ட் உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட தகவல்களைகூட தெரிந்துகொள்ளாமல், குடிமகன்கள் காலங்காத்தாலேயே டாஸ்மாக் முன்பு கண்களை கசக்கி கொண்டு உட்கார்ந்து விட்டனர். இதை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் முன்பு ஏராளமானோர் குவிந்து காத்து கிடந்தனர். ஆனால் அந்த டாஸ்மாக் கடைக்கு பெரிய பூட்டாக பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது.. அது கூட தெரியாமல் அங்கேயே அவர்கள் உட்கார்ந்திருந்தனர்.
"காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போகுதடி, பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி" என்றும் ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனரா என்றும் பாட்டுக்களும், வடிவேலு டயலாக்குகளும் இந்த வீடியோவில் கேட்க முடிகிறது. ஆனால் குடிமகன்கள் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர்.
அவர்கள் பேசும்போது, "பகலில் ஒரு சட்டம், இரவில் ஒரு சட்டமா, எங்களுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும், நாங்க இனிமேல் சரக்குக்கு எங்கே போவது? கையில் டோக்கன் இருக்கு பாருங்க, இதை எதுக்கு எங்களுக்கு தரணும்? நேத்து நாங்க 9 மணிக்கு வந்தோம்.. இன்னைக்கு வரைக்கும் எதுவுமே சாப்பிடாம, பசி, பட்டினியா இப்படியே திரும்பி போறதா நாங்க" என்று ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்தனர்"
இப்படி சோஷியல் மீடியாவில் வீடியோக்கள் பல வைரலாகி விட்டாலும், இந்த குடிமகன்களின் வேண்டுகோள்களும், கண்ணீரும், ஆதங்கமும் வேதனையைதவிர வேறு எதையுமே நமக்கு ஏற்படுத்தவில்லை!!
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
717 டாஸ்மாக்கை மூடுறதா சொன்னீங்களே! ஓட்டேரி லிஸ்ட்ல இல்லை? தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வைத்த டிமாண்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications