வேளச்சேரி பிரபல மால் கழிவறையில் பெண் வங்கி அதிகாரி.. 2 கிலோ தங்கம்.. பாழான தந்திரம்
சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல தனியார் வங்கியில் நடந்த 2 கிலோ தங்க நகை கொள்ளை சம்பவம் மிகவும் விசித்திரமானது.. இப்படியும் கூட வங்கி அதிகாரி இருப்பாரா என்ற சந்தேகம் எழும்.. அதேநேரம் மிக தந்திரமாக நடந்த தங்க நகை கொள்ளை என்பது இதுவரை கேள்விப்படாத விசித்திரமானது. ஏனெனில் வங்கி லாக்கர் பாதுகாப்பு அதிகாரியான பெண் அதிகாரியே இதனை செய்ததாக எழுந்த புகார் தான் திடுக்கிட வைத்துள்ளது. எப்படி நடந்தது.. வங்கி பெண் அதிகாரி சிக்கியது எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்.
சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல தனியார் வங்கி கிளையின் மேலாளரான 46 வயதாகும் அகமது காதிரி என்பவர் வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் . அந்த புகார் மனுவில், எங்கள் வங்கியில் ஒரு பைக்குள் 1.25 கிலோ எடையுள்ள தங்க நகைகள் அநாதையாக கிடந்தது. அந்த நகைகள் யாருடையது? என்று எங்களுக்கு தெரியவில்லை. பர்தா அணிந்த மர்ம பெண் ஒருவர் வங்கிக்கு வந்ததாகவும், அவர்தான் அந்த நகைகளை போட்டுவிட்டு சென்றதாகவும் சந்தேகப்பட்டோம்.

பர்தா அணிந்த பெண்
அந்த பெண் வங்கிக்குள் சர்வ சாதாரணமாக நடமாடினார் அவர் யார்? என்று விசாரிப்பதற்குள் மாயமாகிவிட்டார். அந்த பர்தா அணிந்த பெண், வங்கியின் லாக்கர் உள்ள பகுதிக்கும் நேராக சென்றார். இதுகுறித்து விசாரணை நடத்தி குறிப்பிட்ட பெண் யார்? என்றும், அவர்தான் அந்த நகைகளை போட்டுவிட்டு சென்றாரா? என்பது குறித்தும் கண்டுபிடிக்க வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.
வங்கியில் நடமாட்டம்
இதுதொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் இந்த வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்தார்கள். இவர்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட பர்தா அணிந்த பெண் வங்கிக்குள் நுழைந்து நடமாடிய காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த பெண் வங்கிக்குள் இருந்த நாற்காலியில் வாடிக்கையாளர் போல உட்கார்ந்திருக்கிறார். அவர் உட்கார்ந்த நாற்காலிக்கு கீழ்தான் அநாதையாக கிடந்த தங்க நகைகளும் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் குறிப்பிட்ட பர்தா அணிந்த பெண், வங்கிக்கு வெளியில் வந்து ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். அந்த பெண் ஆட்டோவில் ஏறி பல்வேறு பகுதிகளில் சுற்றிவிட்டு, அங்குள்ள வணிக மால் ஒன்றிற்குள் போயிருக்கிறார். வணிக மாலில் உள்ள கழிவறைக்கு சென்ற அந்த பெண், பர்தா உடையை கழற்றிவிட்டு சேலை அணிந்த நிலையில் வெளியில் வந்துள்ளார். பின்னர் காத்திருந்த ஆட்டோவில் ஏறி, அதே பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது.
வங்கி அதிகாரி
குறிப்பிட்ட அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்த வங்கி நிர்வாகத்தினர், அந்தப்பெண் தங்களது வங்கி கிளையிலேயே வேலை பார்ப்பதாகவும், தற்போது விடுமுறையில் இருப்பதாகவும் கூறினார்கள். அந்த பெண், வங்கியில் உள்ள லாக்கரின் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றியது தெரியவந்தது. அந்த பெண் அதிகாரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அனைத்து தகவல்களும் வெளியானது.
எப்படி நகையை எடுத்தார்
குறிப்பிட்ட அந்த பெண் அதிகாரியின் பெயர் பத்மபிரியா (38). இவர் வாடிக்கையாளர்கள் லாக்கரில் வைத்துள்ள நகைகள் விவரங்களை தெரிந்துகொண்டுள்ளார். உண்மையில் அப்படி அறிந்து கொள்ளக்கூடாது.. அறியவும் முடியாது. ஆனால் 2 வாடிக்கையாளர்களிடம் பேசி, பழகி அவர்களிடமிருந்து லாக்கரின் சாவியை வாங்கியுள்ளார். பின்னர் லாக்கரில் அவர்கள் வைத்துள்ள நகைகளை நூதனமாக கொள்ளையடித்திருக்கிறார். ஒரு வாடிக்கையாளரின் லாக்கரில் இருந்த சுமார் 300 கிராம் நகைகளை கொள்ளையடித்த பத்மபிரியா மீது விஷயம் தெரிந்து ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
லாக்கரில் வைக்க முயற்சி
அந்த வழக்கில் கைதாகி, பத்மபிரியா ஏற்கனவே சிறைக்கு சென்று வந்துள்ளார். 2-வதாக, இன்னொரு வாடிக்கையாளரின் லாக்கரில் இருந்த ஒன்றரை கிலோ நகைகளை பெண் அதிகாரி பத்மபிரியா நைசாக திருடி சென்றிருக்கிறார். 2-வது முறையாகவும் தான் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று பயந்துபோன பெண் அதிகாரி பத்மபிரியா, பர்தா அணிந்து வேடமிட்டு வந்து குறிப்பிட்ட நகைகளை வங்கியின் லாக்கருக்குள்ளே வைத்துவிட்டு செல்ல முயற்சி செய்துள்ளார். அது முடியாமல் போகவே நகையை வங்கியில் அநாதையாக போட்டுவிட்டு பத்மபிரியா நைசாக தப்பிச்சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
வங்கியின் லாக்கருக்கு பொறுப்பு அதிகாரியாக இருந்த பத்மபிரியா வாடிக்கையாளர்களின் லாக்கரில் இருந்து சுமார் 2 கிலோ நகைகளை நூதனமாக கொள்ளையடித்த சம்பவம் வங்கி ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. தீவிர விசாரணைக்கு பிறகு பத்மபிரியா நீதிமன்ற காவலில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications