செஸ்ஸுக்கு குதிரை.. ஹாக்கிக்கு யானை! கவனம் ஈர்க்கும் தமிழக அரசு லோகோ - ஆஸ்கருக்கும் தொடர்பு இருக்கா?
சென்னை: சென்னையில் நடைபெற இருக்கும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி தொடருக்கான லோகோவாக யானை தேர்வு செய்யப்பட்டு உள்ள நிலையில், இதற்கும் ஆஸ்கர் விருது மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இடையிலான ஒற்றுமையை பார்ப்போம்.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 7 வது "ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி" சென்னையில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இந்த புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறுகிறது.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 போட்டியினை சிறப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்தும் வகையில் உலகின் முதல் பாரிஸ் ஒலிம்பிக் டர்ஃப் அமைத்தல், புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை இழை ஆடுகளம், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள், சிறப்பு விருந்தினர்கள் அமருவதற்கான பார்வையாளர் மாடம் மற்றும் பிற சீரமைப்புபணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் மைதானத்தை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க வருகின்ற சர்வதேச ஹாக்கி வீரர்கள் தங்கும் நட்சத்திர விடுதிகள், உணவு, போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று சென்னை மெரினா கடற்கரையில் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. பொம்மன் என்ற அந்த லோகோ யானை வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அறிமுகம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆசிய ஹாக்கி கோப்பையினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்கின்ற வகையில் "பாஸ் தி பால்" கோப்பை (PASS THE BALL TROPHY TOUR) சுற்றுப் பயணத்தை தொடங்கி வைத்தார்.
முதலாவதாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பையின் பாஸ் தி பால் கோப்பை சுற்றுப்பயணம் சென்னை வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் வழியாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை பயணிக்கும். அத்துடன் ஆகஸ்டு 3 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் லோகோவாக குதிரை வடிவிலான லோகோவை தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு யானை வடிவிலான லோகோவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பொம்மன் என பெயர் வைத்து இருப்பதற்கு ஆஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆம், ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers ஆவணப் படத்தில் வரும் நீலகிரியை சேர்ந்த யானையையும் அதை வளர்க்கும் பொம்மன் - பெள்ளியையும் மனதில் வைத்தே இந்த பெயர் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications