வேலூரில் செலவு செய்த பணம் வீண்.. தேர்தல் ஆணையம் திருப்பி கொடுக்குமா? சீமான் கிடுக்குப்பிடி!
லோக்சபா தேர்தலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.
லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் வாக்களித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். நாம் தமிழர் கட்சிக்கு பெரிய வெற்றிவாய்ப்பு உள்ளது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

சீமான் பேட்டி
சீமான் தனது பேட்டியில், வாக்குப்பதிவு எந்திரங்கள் பல இடங்களில் பழுதாகி இருக்கிறது. அந்த அளவிற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பற்று உள்ளது. இதை ஏற்கனவே சோதித்து இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பொறுப்பற்று செயல்படுகிறது. இதை எல்லாம் கூடவா பார்க்காமல் இருப்பார்கள்.

வருமானவரித்துறை எப்படி
வருமானவரித்துறையை வைத்து நாடகம் ஆடுகிறார்கள். வேலூரில் மட்டும்தான் பணம் கொடுத்தார்களா? மக்களுக்கு எதை காட்ட நினைக்கிறீர்கள். வேறு எங்குமே காசு கொடுக்கவில்லையா?. மக்களை ஏன் ஏமாற்ற பார்க்கிறீர்கள்.

நாங்கள் செய்யவில்லை
நீங்க சொன்ன செலவை கூட நாங்கள் முழுதாக செய்யவில்லை. நாங்கள் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பி தருமா. முறைகேடாக செலவு செய்த நபரை மட்டும்தான் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். எல்லோருக்கும் தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்.

போட்டி இல்லை
காசு கொடுத்த வேட்பாளர் 10 ஆண்டுகளுக்கு போட்டியிட கூடாது என்று தடை விதிக்க வேண்டும். இது அதிமுக கூட்டணியின் தேர்தல் ஆணையம். சுதீஷை துரைமுருகன் அவமதித்த கோபத்தில், தேமுதிகவை மகிழ்ச்சி படுத்துவதற்காகத்தான் தேர்தல் ஆணையம் வேலூரில் இப்படி செயல்படுகிறது, என்று சீமான் தேர்தல் ஆணையம் மீது குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications