என்ன கொடுமை இது.. ஊருக்குப் போக பஸ் இல்லை... பெருங்களத்தூரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!
சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகள் வரவில்லை என கூறி பெருங்களத்தூரில் 500க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்து வருகிறார்கள்
Recommended Video
சென்னை: சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகள் வரவில்லை என கூறி பெருங்களத்தூரில் 500க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்து வருகிறார்கள். இரவு முழுக்க காத்திருந்தும் பேருந்துகள் வராததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது.

ஆனால் தமிழகத்தில் வாக்களிக்க செல்லும் மக்களுக்கு தமிழக அரசு சார்பாக போதிய பேருந்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை. வாக்களிக்க செல்லும் மக்கள் பல இடங்களில் போதிய பேருந்து இல்லாமல் கடும் அவஸ்தை பட்டனர்.
இந்த நிலையில் தற்போது பெருங்களத்தூரில் 500க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்து வருகிறார்கள். சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகள் வரவில்லை என கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் நேற்று இரவில் இருந்து பெருங்களத்தூரில் பேருந்துக்காக காத்து இருக்கிறார்கள். ஆனால் அப்படி காத்து இருந்தும் கூட இன்னும் ஒரு பேருந்து கூட இவர்களுக்கு கிடைக்கவில்லை. இரவு முழுக்க சாலையில் தூங்கி, பேருந்துக்காக இவர்கள் காத்திருந்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது.
இந்த கோபத்தில் இவர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுடன் போலீசார் கடுமையான வாக்குவாதம் செய்து வருவதால் பெருங்களத்தூரில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications