புலி வருதுதான்- செல்வப் பெருந்தகைக்கு முதல் செட்பேக்? 2 காங். எம்எல்ஏக்களுடன் பாஜகவில் விஜயதாரணி?
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி, பிரதமர் மோடி முன்னிலையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைய இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்ட நிலையில் விஜயதாரணி உட்பட 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், பாஜகவுக்கு தாவுவது அவருக்கு பெரும் பின்னடைவு என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக 3-வது முறையாக வென்றவர் விஜயதாரணி. 2016, 2021 சட்டசபை தேர்தல்களின் போது விஜயதாரணி, காங்கிரஸில் இருந்து விலகுவார்; தமாகா, அதிமுகவில் சேருவார்; பாஜகவில் இணையப் போகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை சந்தித்து பேசி, அதிமுக ஆதரவாளராகவே அடையாளப்படுத்திக் கொண்டதால் சட்டசபையில் ஜெ. ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகவும் பேசப்பட்டவர் விஜயதாரணி. ஆனால் தாம் குழந்தையில் இருந்தே காங்கிரஸ் கட்சிதான். என்னுடைய காங்கிரஸ் கட்சியை விட்டு நான் எப்படி விலகுவேன்; ஒவ்வொரு தேர்தலின் போதும் எனக்கு சீட் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே கட்சிக்கு உள்ளேயும் தொகுதியில் இருந்து எதிர்க்கட்சிகளும் கிளப்பிவிடுகிற செய்திதிதான் இது என்பது விஜயதாரணியின் பதிலாகவும் இருந்தது.

மீண்டும் பரபரப்பில் விஜயதாரணி: தற்போதும் லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாஜக பக்கம் விஜயதாரணி தாவப் போகிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு தேர்தலின் போதும் விஜயதாரணி குறித்து இப்படியான செய்திகள் வெளியாவது வழக்கம் என நாமும் விவரித்து எழுதி இருந்தோம்.
விஜயதாரணியும் 2 எம்.எல்.ஏக்களும்: இந்த நிலையில் விஜயதாரணி தம்முடன் 2 எம்.எல்.ஏக்களையும் அழைத்துக் கொண்டு மோடி முன்னிலையில் பாஜகவில் இணையப் போகிறார் என புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருக்கக் கூடிய, அடுத்த முறை சீட் கிடைக்காது என நம்புகிற 2 எம்.எல்.ஏக்களைதான் விஜயதாரணி, பாஜகவுக்கு அழைத்துப் போகிறார் எனவும் கூறப்பட்டு வருகிறது.
மோடி முன்னிலையில் பாஜகவில் ஐக்கியம்?: இதற்காகவே தற்போது விஜயதாரணி டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டுக்கு வரும் 27-ந் தேதி பிரதமர் மோடி வருகை தரும் போது பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
விஜயதாரணி சொன்னது என்ன?: இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பட்டும் படாமலுமே விஜயதாரணி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பதிலளித்த விஜயதாரணி, அதெல்லாம் எதுவும் இல்லைதான். இந்த மாதிரி செய்தி பெரியதாக பரவி இருக்கிறதுதான். அதேநேரத்தில் இதை உண்டு எனவும் சொல்லவில்லை. இல்லை எனவும் சொல்லவில்லை. ஆனால் வழக்கு ஒன்றுக்காகவே டெல்லியில் தங்கி இருக்கிறேன். இப்படியான செய்திகளை ஆச்சரியமாகவும் பார்த்து கொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறார்.
செல்வப் பெருந்தகைக்கு செட்பேக்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப்பெருந்தகை சனிக்கிழமையன்று நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் பலரும் பகிரங்கமாக போட்டி போட்டு லாபி செய்தனர். ஆனால் தலித் தலைவரான செல்வப் பெருந்தகைக்கு காங்கிரஸ் தலைவர் கிடைத்துவிட்டது. இந்த நிலையில் விஜயதாரணியுடன் 3 எம்.எல்.ஏக்கள் ஒரு சேர பாஜகவுக்கு தாவப் போவது அவருக்கு மிகப் பெரும் பின்னடைவாக இருக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
2021 தேர்தலில் காங்கிரஸ்: 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி மொத்தம் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 18 இடங்களில் வென்றது காங்கிரஸ். ஆளும் திமுக 133 இடங்கள், பிரதான எதிர்க்கட்சி 66 இடங்களைத் தொடர்ந்து 3-வது பெரிய கட்சியாக 18 இடங்களில் வெற்றி பெற்றது காங்கிரஸ். விளவங்கோடு சட்டசபை தொகுதியில் விஜயதாரணி 52.12% வாக்குகளைப் பெற்று வென்றார்.
விளவங்கோடு தொகுதி: 2011 சட்டசபை தொகுதியில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஜயதாரணி போட்டியிட்டு 62,898 வாக்குகளைப் பெற்றார். அத்தேர்தலில் 43.69% வாக்குகளை விஜயதாரணி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு சிபிஎம் கட்சியின் லீமா ரோஸ் 39,109 வாக்குகள் (27.17%) மட்டுமே பெற்றிருந்தார். 2016 தேர்தலில் மீண்டும் களமிறங்கிய விஜயதாரணி 68,789 வாக்குகள் (42.73%) பெற்றார். பாஜகவின் தர்மராஜ் 35,646 (22.14%) வாக்குகளை பெற்றார். 2021 தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்ட விஜயதாரணி 87,473 வாக்குகளைப் (52.12%) பெற்றார். பாஜகவின் ஆர். ஜெயசீலன் 58,804 ( 35.04%) வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications