திமுக அணியில் பாமக இணைந்தால் வெளியேறும் காங்கிரஸ், விசிகக்கு தொகுதிகள் ரெடி.. காத்திருக்கும் அதிமுக?
சென்னை: திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இணையும் நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாறும் நிலைமை உருவாகும் என கூறப்படுகிறது. திமுக அணியில் இருந்து காங்கிரஸ், விசிக வெளியேறி தங்களுடன் இணைந்தால் எத்தனை தொகுதிகள் ஒதுக்க முடியும் என்கிற உத்தேச கணக்குடன் அதிமுக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுகவின் உத்தேச பார்முலா: திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக, தவாக ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. தொடக்கத்தில் 2019 தேர்தல் தொகுதி பங்கீடு பார்முலாவை அப்படியே கடைபிடிக்கலாம் என திமுக தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாம். தேவைப்பட்டால் சிறிய அளவிலான மாற்றங்களை செய்யலாம் எனவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.

திமுக அணியில் மாற்றம் வருமா?: ஆனால் திமுக கூட்டணியில் பாமக இணையலாம் என்கிற பேச்சுகள் பலமாக அடிபடுகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். இதேபோல மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் திமுகவுடன் இணக்கமாக இருக்கிறார். திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளுக்கான தொகுதிகள் குறையும்; இதில் காங்கிரஸுக்குதான் அதிக பாதிப்பு ஏற்படும். பாமக இடம் பெறும் கூட்டணியில் விசிக இருக்காது என்பது அக்கட்சியின் திட்டவட்டமான நிலைப்பாடு. இதனால் காங்கிரஸும் விசிகவும் அதிமுக கூட்டணியை நோக்கி செல்லக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
அதிமுகவின் தொகுதி பார்முலா: அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை எத்தனை கட்சிகள் இணைந்தாலும் ஏற்கும் நிலையில் இருக்கிறதாம். காங்கிரஸ், விசிக என திமுக அணியில் இருந்து வெளியேறும் கட்சிகளுக்கு கவுரவமான தொகுதிகளை ஒதுக்கவும் அதிமுக தயாராக இருக்கிறதாம். தற்போதைய நிலையில் காங்கிரஸுக்கு 10 அல்லது 12 தொகுதிகளையும் விசிகவுக்கு 3 அல்லது 4 தொகுதிகளையும் தரவும் அதிமுக தயாராக இருக்கிறதாம். இதனாலேயே திண்டுக்கல் உள்ளிட்ட சில தொகுதிகளை காங்கிரஸ் வந்தால் விட்டுக் கொடுக்கலாம் எனவும் அதிமுக முடிவோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல விசிகவுக்கு சிதம்பரம் தொகுதியை விட்டுத் தரவும் அதிமுக தயாராக உள்ளதாம். திமுக, அதிமுக இரு அணிகளிலும் இன்னும் சில வாரங்களில் கூட்டணிகள் குறித்த தெளிவு பிறக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications