Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛சிரித்த முகம்’.. அமமுகவுக்கு எத்தனை இடங்கள்? பாஜக - டிடிவி தினகரன் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் பாஜக-அமமுக கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து நள்ளிரவில் சென்னை தனியார் ஓட்டலில் பாஜக-அமமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் டிடிவி தினகரன் சிரித்த முகத்தோடு வெளியே வந்தார். இந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? என்பது பற்றி டிடிவி தினகரன் விளக்கி உள்ளார்.

விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என மொத்தம் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. திமுக கூட்டணியை பொறுத்தமட்டில் தொகுதி பங்கீடு என்பது முடிவடைந்துவிட்டது.

Lok Sabha Election 2024 BJP and AMMK s TTV Dhinakaran dissussion about Constituency negotiation

சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களமிறங்குகிறது. அதிமுக, பாஜக தங்களின் கூட்டணியை பலமாக்க பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளதாக அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அறிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛அமமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. பாஜக சார்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் டெல்லி பிரதிநிதி கிஷன் ரெட்டி என்னிடம் பேசினார்கள். பாஜக கூட்டணிக்கு அமமுகவின் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்தேன். கடந்த மூன்று மாதங்களாகவே பாஜக தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். இன்று அதிகாரபூர்வமாக பேசினோம். அமமுகவின் கோரிக்கைகளை ஏற்கெனவே கடிதம் மூலமாக பாஜகவிடம் கொடுத்துவிட்டோம்'' என்றார்.

டிடிவி தினகரன் நேற்று இப்படி அறிவித்த நிலையில் இன்று பாஜக- அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் டிடிவி தினகரன் மற்றும் பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கி ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது.. பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் விகே சிங், கிஷாண் ரெட்டி, எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

இந்த பேச்சுவார்த்தையின்போது டிடிவி தினகரன் 4 லோக்சபா தொகுதிகளை பாஜக கூட்டணியில் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு டிடிவி தினகரன் சிரித்த முகத்தோடு வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு டிடிவி தினகரன் கூறியதாவது:

தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி கலந்தாலோசனை நடத்தினோம். தொகுதிகள் பற்றியெல்லாம் ஒரு உறுதியான முடிவுக்கு வந்த பிறகு உங்களிடம் சொல்கிறேன். சின்னம் தொடர்பாக எனக்கு எந்த நிர்பந்தமும், அச்சுறுத்தலும் இல்லை. ஆர்கே நகரில் நான் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அமமுக குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடும். அதுதான் எங்களின் விருப்பமாக உள்ளது.

மேலும் எங்களது கட்சி மாநில கட்சியாக உள்ளது. வளரும் கட்சியாக உள்ளது. எனது கட்சி நிர்வாகிகள் சட்டசபை தேர்தலில் போட்டியிட தான் விரும்புகின்றனர். ஆனாலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த தொகுதிகளின் லிஸ்ட்டை தான் அண்ணாமலையிடம் வழங்கி உள்ளோம்.

மீண்டும் 3வது முறையாக மோடி பிரதமராக வருவதன் மூலம் தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை பெற்று தர முடியும் என்ற அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளோம். இந்த தேர்தலில் எங்களின் இலக்கு என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று தர வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள். அதற்காக நாங்கள் இணைந்துள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம்'' என்றார்.

இதன்மூலம் டிடிவி தினகரன் அமமுகவின் விருப்ப தொகுதி பட்டியலை பாஜகவிடம் வழங்கி அதனை வழங்கும்படி கேட்டுள்ளார். இதுபற்றி இருதரப்பும் விவாதித்துள்ள நிலையில் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அமமுகவுக்கு தொகுதி பங்கீடு வழங்கப்படும்.

முன்னதாக டிடிவி தினகரன் இந்த பேச்சுவார்த்தைக்காக சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் வீட்டு காரில் புறப்பட்டார். அப்போது அவரை சூழ்ந்து கொண்டு பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு டிடிவி தினகரன் பதிலளித்தார்.

அப்போது, ‛‛மத்திய அமைச்சர்கள் கிஷண் ரெட்டி, விகே சிங்கை நான் நேற்று சந்திக்கவில்லை. இன்று அவர்கள் சென்னையில் உள்ளதால் சந்திக்கும்படி அண்ணாமலை அழைத்தார். இதனால் சந்திக்க செல்கிறேன். நான் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக கூறியிருக்கிறேன். உறுதியாக இந்திய பிரதமராக 3வது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். இந்த சமயத்தில் தமிழகத்தில் இருந்து பாஜகவுக்கு கவுரவமிக்க வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலைக்கு உறுதுணையாக இந்த தேர்தலில் அமமுக போட்டியிடும்'' என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+