பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
சென்னை: ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பாஜக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று வெற்றிகரமாக கையெழுத்தானது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 17 ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவால் கழற்றிவிடப்பட்ட பாஜக தனியே கூட்டணி அமைத்து களமிறங்குகிறது.

பாஜக தனது தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளது. பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளன.
இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஆனால் பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் தான் அடுத்தடுத்து இன்று கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அந்த வகையில் இன்று மாலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாயலத்தில் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது. அதன்படி ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இருப்பினும் ஜான்பாண்டியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதியின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஜான் பாண்டியனை பொறுத்தமட்டில் 3 தொகுதிகளை கூறி அதில் ஒன்றை கேட்டுள்ளார். அதன்படி தென்காசி, திருநெல்வேலி, இல்லாவிட்டால் ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கும்படி பாஜகவிடம் கோரிக்கையை வைத்துள்ளார்.
இதில் தென்காசி தனித்தொகுதியாகும். திருநெல்வேலி பொதுத்தொகுதி என்றாலும் கூட ஜான் பாண்டியனின் சொந்த தொகுதியாகும். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் தான் இந்த ஜான் பாண்டியன். மேலும் ராமநாதபுரம் தொகுதியில் ஜான் பாண்டியன் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகம் உள்ளன. இதனால் இந்த 3 தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற நோக்கத்தில் அவர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். இருப்பினும் ஜான் பாண்டியன் கட்சிக்கு பாஜக எந்த தொகுதியை ஒதுக்கீடு செய்கிறது? என்பதை அறிய நாம் சற்று காத்திருக்க வேண்டும்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications