Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

129 தொகுதிகளில் 100 இடங்களில் தோல்வி தான்.. பாஜகவுக்கு ஷாக் தரும் தென்மாநிலங்கள் - கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 129 தொகுதிகளில் பாஜக 100 தொகுதிகளில் தோல்வியை சந்திக்கலாம் என ஜி நியூஸ்-மேட்ரிஸ் கருத்து கணி்பபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக கட்சிகளுக்குள்ள வெற்றி வாய்ப்பு நிலவரம் தொடர்பான விபரம் வருமாறு:

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரமாக தொடங்கி உள்ளன. பாஜக 400 தொகுதிகளை வெல்ல இலக்கு நிர்ணயம் செய்து வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டு வருகிறது.

 Lok Sabha Election 2024: BJP May win 29 seats out of 129 in 5 southern states including, says Zee News-Matrize Opinion Poll

காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி உள்பட 26 கட்சிகள் ‛இந்தியா' கூட்டணி என்ற பெயரில் பாஜகவை வீழ்த்த இணைந்துள்ளன. மாநில வாரியாக தொகுதி பங்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு கரத்து பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் கருத்து கணிப்புகள் மேற்கொண்டு வெளியிட்டு வருகின்றன.

மீண்டும் பாஜக ஆட்சி: அந்த வகையில் ஜி நியூஸ்-மேட்ரிஸ் (ZEE News - Matrix) சார்பில் கடந்த மாதம் 5ம் தேதி முதல் 27 ம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளை சேர்ந்த மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. 87 ஆயிரம் பெண்கள், 54 ஆயிரம் ஆண்கள் என மொத்தம் 1,67,843 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

தென்மாநில நிலவரம்: இந்த கருத்து கணிப்பில் பாஜக தான் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‛இந்தியா' கூட்டணி 100 இடங்களில் தோல்வி முகத்தில் தான் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வழக்கம்போல் தென்மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை வெல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பாஜக தலைவர்கள் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் அதிக கவனம் செலுத்தி வந்தனர்.

மாறாத மக்கள்: இருப்பினும் மக்களின் மனநிலை என்பது பாஜகவுக்கு சாதகமாக இல்லை என்பதை இந்த கருத்து கணிப்பு முடிவு உணர்த்துகிறது. அதாவது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் மொத்தம் 129 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் வெறும் 29 ல் மட்டும் தான் பாஜக அல்லது பாஜக தலைமையிலான கூட்டணி வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் பாஜகவின் கூட்டணி வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கை மாநிலங்கள் வாரியாக வருமாறு:

கர்நாடகா - கேரளா: அதன்படி கர்நாடகாவில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜக 23 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. மாறாக ஆளும் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் ஜெயிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக கேரளா மாநிலத்தில் மொத்தம் 20 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அனைத்து தொகுதிகளையும் ‛இந்தியா' கூட்டணி வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா - தெலுங்கானா: ஆந்திராவை பொறுத்தமட்டில் மொத்தம் 25 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கரிஸ் கட்சி 19 இடங்களிலும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 6 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேவேளையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கூட கிடையாது என தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் தெலுங்கானவில் 20 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு 17 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களையும், பாஜக 5 இடங்களையும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 3 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு: மேலும் தமிழகத்தை பொறுத்தமட்டில் ‛இந்தியா' கூட்டணியான திமுக தலைமையிலான அணியின் வேட்பாளர்கள் 36 தொகுதிகளில் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக அதிமுக கூட்டணி 2 இடத்திலும், பாஜக கூட்டணி ஒரு இடத்திலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 தொகுதியில் மட்டும் வெற்றி: மொத்தமாக இந்த 5 மாநிலங்களில் 129 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதன்படி பார்த்தால் கர்நாடகாவில் 23 இடங்கள், தெலுங்கானாவில் 5 இடங்கள், தமிழ்நாட்டில் ஒரு இடம் என 29 இடங்களில் மட்டுமே பாஜக வெல்லும். குறிப்பாக கேரளா, ஆந்திராவில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது என ஜி நியூஸ்-மேட்ரிஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு தென்மாநிலங்களில் வழக்கம்போல் மாநில கட்சிகளின் ஆதிக்கம் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இருக்கிறது என்பதை இந்த கருத்து கணிப்பு உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+