பிரதமர் வேட்பாளர் யார்? கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் திமுகவுக்காக நன்றாக பிரசாரம் செய்து வருகிறார் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு "இந்தியாதான்" கூட்டணியின் வேட்பாளர் எனவும் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

சென்னையில் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். லோக்சபா தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். மேலும் 64 பக்கங்களைக் கொண்ட 36 முக்கிய வாக்குறுதிகளுடனான தேர்தல் அறிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

Lok Sabha Election 2024 CM MK Stalin comments on Who is Prime Minister Candidate

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முதல்வர் ஸ்டாலினிடம் முன் வைத்தனர். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், . நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இங்கிருக்கும் ஆளுநர் ஒருவரே போதும். தி.மு.க.விற்கு நன்றாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று. அதேபோல, இப்போது பிரதமரே போதும். அவரே எங்களுக்கு நன்றாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். எனவே இரண்டு பேரும் சேர்ந்தே மீண்டும் தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தருவதற்கான வாய்ப்பை அவர்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை என்றார்.

மேலும் நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இது குடும்பக் கட்சிதான். திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு குடும்பப் பாச உணர்வோடு, கருணாநிதி, அண்ணா தொடங்கி வைத்திருக்கிறார்கள். உழைப்பின் அடிப்படையில்தான் பொறுப்புகளும், பல பணிகளும் கொடுக்கப்படுகிறதே தவிர, வாரிசு அடிப்படையில் கொடுக்கப்படுவது அல்ல என மற்றொரு கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

அதிமுக, பாஜக குறித்த கேள்விக்கு, பாஜக வளர்ந்து வருகிறது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு தெரியும். யார் வளர்ந்திருக்கிறார்கள்? யார் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்? யார் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்? யார் நோட்டாவைவிடக் குறைவாக வாக்கு வாங்குகிறார்கள்? என்பது தெரியவரும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

உங்கள் மனதின்படி பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவீர்கள்? என்ற கேள்விக்கு "இந்தியாதான்" கூட்டணியின் வேட்பாளர் என்று பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+