வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. தமிழகத்தில் 5 சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு?
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கரூர் ஜோதிமணி உள்ளிட்ட 5 சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பது காங்கிரஸ் கட்சியினரின் எதிர்பார்ப்பு.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளிலும் புதுச்சேரி ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 2019 தேர்தலிலும் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது.

தற்போதைய லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகக் கூடும். இந்த பட்டியலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் 5 சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்பது காங்கிரஸ் கட்சியினரின் எதிர்பார்ப்பு.
காங்கிரஸில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் சிட்டிங் எம்.பிக்கள்:
கரூர்- ஜோதிமணி: இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்டவர் ஜோதிமணி. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான இளம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். 2011-ல் கரூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார் ஜோதிமணி. அத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட செந்தில் பாலாஜியிடம் தோல்வியைத் தழுவினார் ஜோதிமணி. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, அதிமுகவின் தம்பிதுரையை எதிர்த்துப் போட்டியிட்டார். அத்தேர்தலிலும் தோல்வியடைந்தார் ஜோதிமணி. ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் 63.06% வாக்குகளைப் பெற்று அதிமுகவின் தம்பிதுரையை வீழ்த்தினார். சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை தோற்கடித்தார் ஜோதிமணி.
விருதுநகர்- மாணிக்கம் தாகூர்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு மிக நெருக்கமானவர். பல்வேறு மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். தெலுங்கானாவில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சி அமைத்ததில் மாணிக்கம் தாகூரும் முக்கிய பங்கு வகித்தார். 2009-ம் ஆண்டு விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்பியானார். ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார் மாணிக்கம் தாகூர். 2019-ல் மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார்.
சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்: இந்திரா, ராஜீவ் காந்தி காலத்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு அதிமுகவின் செந்தில்நாதனிடம் தோல்வியடைந்தார் கார்த்தி சிதம்பரம். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வென்றார். மகன் கார்த்தி சிதம்பரம் லோக்சபா எம்பியாகவும் தந்தை ப.சிதம்பரம் ராஜ்யசபா எம்பியாகவும் பதவி வகிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி- செல்லக்குமார்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் டாக்டர் செல்லக்குமார். சென்னை அண்ணா நகர், தியாகராயர் நகர் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர். 2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். காங்கிரஸ் கட்சியிலும் மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் டாக்டர் செல்லக்குமார்.
கன்னியாகுமரி- விஜய் வசந்த்: பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த். திரைப்பட நடிகராக இருந்த விஜய் வசந்த் தந்தை வசந்தகுமார் மறைவால் அரசியலுக்கு வந்தார். 2021-ம் ஆண்டு கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்பியானவர் விஜய் வசந்த்.
-
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications