லோக்சபா தேர்தல் 2024: ஸ்பீடு காட்டும் திமுக.. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதா?
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் திமுக அமைப்பு பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில் இந்த முறை பாஜகவை மத்திய வரவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் புதிய கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

இதேபோல், தமிழகத்திலும் முதல்வர் மு.க ஸ்டாலின் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம் என்றும், மத்திய மோடி ஆட்சி இதோடு முடிவுக்கு வந்துவிடும் என்று சூளுரைத்து வருகிறார். இப்படி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் திமுக அமைப்பு பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அவருடன் எம்பி நவாஸ் கனியும் சென்றிருந்தார். இந்த சந்திப்பின் போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசப்பட்டதாக தெரிகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியை திமுக ஒதுக்கியது. இதில் நவாஸ்கனி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை இராமநாதபுரம் தொகுதியில் திமுகவே போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இதனால் அதற்கு பதிலாக வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கூட்டணி குறித்து நாங்கள் பேசவில்லை என்றும் , கட்சியின் 75வது ஆண்டு பவளவிழா மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினை அழைப்பதற்காக தான் சந்தித்ததாகவும் நவாஸ் கனி எம்பி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications