‛இந்தியா’ VS என்டிஏ.. தென்மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ‛மாஸ்’.. பாஜகவும் முன்னேறுதே.. பரபர சர்வே
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம் உள்பட 5 தென்மாநிலங்களில் ‛இந்தியா' கூட்டணிக்கு 80 இடங்களும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 35 இடங்களும் கிடைக்கும் என புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் வாரியாக எந்தெந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்பதை வாங்க பார்க்கலாம்.
இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ல் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில் ஜுன் 1ல் 2ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தொடர்பாக மாநிலங்கள் வாரியாக பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் Election Forecast சார்பில் தென்இந்திய மாநிலங்களில் தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
கேரளா: கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட இங்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தனித்தனியே போட்டியிட்டுள்ளன. அதன்படி வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி (யூடிஎஃப்) 18 இடங்களிலும், மாநிலத்தை ஆளும் இடதுசாரிகள் கூட்டணி (எல்டிஎஃப்) 2 தொகுதிகளிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வரும் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா: ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் இணைந்து பாஜக களமிறங்கி உள்ளது. இதில் பாஜக கூட்டணி 16 இடங்களிலும், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா: தெலங்கானானவில் 17 தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் அரியணை ஏறியது. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி 3 இடங்களிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி ஒரு இடத்திலும் வெல்லு்ம என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா: கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி அரியணை ஏறியது. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தான் பாஜக கூட்டணி 16 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. இதனால் இந்த கருத்து கணிப்பு கர்நாடகா காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ளது.
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 37 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு இடத்திலும், அதிமுக கூட்டணி ஒரு தொகுதியிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் எவ்வளவு: மேற்கூறிய 5 தென்மாநிலங்களின் அடிப்படையில் பார்த்தால் மொத்தம் தென்இந்தியாவில் 129 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் இந்தியா கூட்டணி 80 தொகுதிகளிலும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 35 இடங்களிலும், மற்றவர்கள் 14 தொகுதிகளில் வெல்வார்கள் என Election Forecast கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் கடந்த 2019 தேர்தலை விட பாஜக கூட்டணி முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications