Lok Sabha Election 2024 LIVE: ஒரே நாடு ஒரே தேர்தல்- பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவோம்- பாஜக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல்; பொது சிவில் சட்டம் ஆகியவற்றை நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறும். அனைத்து தொகுதிகளின் வாக்குகளும் ஜூன் 4-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

லோக்சபா தேர்தல் தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்

Lok Sabha Election 2024 LIVE  Indian General Election Latest News Updates and Highlights in Tamil

Apr 14, 2024, 12:11 pm IST

ஏழை குடும்பத்தின் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்- முதியோரும் GPay போன்ற இணைய வழி பண பரிவர்த்தனையை செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப்படும்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:41 am IST

நாடு முழுவதும் மாணவர்களுக்கு நிரந்தர அடையாள எண் வழங்கப்படும்; தொன்மையான மொழி தமிழை உலகளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழி பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்துவோம்: பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:39 am IST

வட இந்தியா ,தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியா பகுதிகளுக்கு புல்லட் ரயில்கள் இயக்கப்படும்; மெட்ரோ ரயில் சேவைகள் வந்தே பாரத் மெட்ரோ சேவைகளாக தரம் உயர்த்துவோம்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:36 am IST

நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வந்தே பாரத் ரயில்களை இயக்குவோம்: பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:35 am IST

வினாத்தாள் கசிவைத் தடுக்கச் சட்டம் கொண்டுவரப்படும்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:30 am IST

பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருந்துகள் வழங்கப்படும்; 5 ஆண்டுகளில் மேலும் 3 பேருக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படும்; முத்ரா கடனுதவி திட்டம் ரூ10 லட்சத்தில் இருந்து ரூ20 லட்சமாக உயர்த்தப்படும்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:28 am IST

கிராமங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:27 am IST

வேலைவாய்ப்பு முதலீடுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம்; பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞர்களுக்கு அதிகாரம்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:26 am IST

அடுத்த 5 ஆண்டுகளில் கிராமங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்-பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:25 am IST

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும்,- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:25 am IST

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:25 am IST

பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:19 am IST

2025ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:19 am IST

2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:18 am IST

இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் கனவை நனவாக்குவோம்- பிரதமர் மோடி
Apr 14, 2024, 10:16 am IST

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரேசனில் இலவச தானியங்கள் வழங்கப்படும்- முத்ரா கடனுதவி ரூ20 லட்சமாக உயர்த்தப்படும்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:13 am IST

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடனான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இத்தேர்தல் அறிக்கையை தயாரிக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள். பாஜக மீது லட்சக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்து கருத்துகளைத் தெரிவித்தனர். பாஜகவின் தேர்தல் அறிக்கைக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்- பிரதமர் மோடி
Apr 14, 2024, 10:11 am IST

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:09 am IST

3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவோம்; முத்ரா திட்டத்தின் கீழ் ரூ20 லட்சம் கடனுதவி வழங்கப்படும்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:08 am IST

இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:03 am IST

பொதுவான வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 10:01 am IST

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்; நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 9:58 am IST

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவரப்படும்- பாஜக தேர்தல் அறிக்கை
Apr 14, 2024, 9:54 am IST

மோடியின் உத்தரவாதம் என்பது 24 காரட் தங்கம்.. ஆகையால் பாஜகவின் தேர்தல் அறிக்கையும் தங்கத்துக்கு நிகரானது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
Apr 14, 2024, 9:48 am IST

Modi's guarantee 2024 என்ற பெயரில் லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Apr 14, 2024, 9:40 am IST

நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் உள்ளிட்ட 27 பேர் கொண்ட குழு பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது.
Apr 14, 2024, 9:39 am IST

பாஜக தேர்தல் அறிக்கை குழு தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் அறிக்கை தயாரிக்கப்பட்டது
Apr 14, 2024, 9:39 am IST

லோக்சபா தேர்தலுக்கான கட்சியின் ‘சங்கல்ப் பத்ரா’ பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டது
Apr 14, 2024, 9:38 am IST

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா பங்கேற்பு
Mar 20, 2024, 12:02 pm IST

திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+