திடீர் பரபரப்பு! ரிசல்ட் நாளில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தனும்! ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்
சென்னை : தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் முதல் கட்ட தேர்தலிலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. தற்போது லோக்சபா தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள சூழலில், நாளை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான அக்பர் அலி, அருணா ஜெகதீசன், அரிபரந்தாமன், சிவக்குமார், செல்வம், எஸ்.விமலா உள்ளிட்ட 7 நீதிபதிகள் கூட்டாக குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், நாட்டில் நடந்து முடிந்துள்ள தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்திய விதம் குறித்து மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தி நிலவுகிறது. புகார்கள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த போதும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்யவில்லை.
தேர்தலில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சு இருந்தது. ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வியடைந்தால் ஆட்சி மாற்றம் என்பது சுமூகமாக இருக்காது. பாஜக தோற்றால் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கக் கூடும். வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் விபரீத சூழல் ஏற்பட்டால், உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். சிக்கல் எழுந்தால் அதனை சரி செய்வதற்கு 5 நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குதிரைபேரம் உள்ளிட்ட அரசமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.தேர்தலுக்கு முந்தைய கூட்டணியையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை எவ்வித பிரச்சனைகளும் ஏற்பட விடாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications