திருமாவளவனின் வெற்றியை தீர்மானிக்க போவது பாமக? சிதம்பரத்தில் வெல்லப்போவது யார்?
சென்னை: தமிழ்நாட்டின் எந்த லோக்சபா தொகுதியையும் விட அதிகப்படியான எதிர்பார்ப்பும், பரபரப்பும் உள்ள தொகுதி என்றால் அது சிதம்பரம் லோக்சபா தொகுதி தான்.. சிதம்பரத்தில் நிற்க போவது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்... இந்த தொகுதியில் திருமாவளவனின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக பாமக இருப்பதே பெரும் பரபரப்புக்கு காரணம்.
லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டை ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 3வது முறையாக வெல்லும் முனைப்பில் இருக்கிறது. அதை தடுக்க இந்தியா கூட்டணியை அமைத்துள்ளது காங்கிரஸ்..

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது.. இந்த கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த முறையும் இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளன் போட்டியிட உள்ளார். சிதம்பரம் லோக்சபா தொகுதியை பொறுத்தரை கடலூர், அரியலூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ளது.
சிதம்பரம் (தனி) லோக்சபா தொகுதியில் சிதம்பரம், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் குன்னம் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வசம் உள்ளது. அரியலூர் திமுக கூட்டணியான மதிமுக வசமும் உள்ளது. காட்டுமன்னார் கோவில் திமுக கூட்டணியான விசிக வசம் உள்ளது. புவனகிரியும், சிதம்பரமும் அதிமுக வசம் உள்ளது.
சிதம்பரம் என்கிற உடனே அங்கு சிதம்பரம் நடராஜர் கோவில் அனைவருக்கும் நியாபகம் வரும்.. சிதம்பரத்தில் தான் அண்ணாமலை பல்கலைக்கழகம் இருக்கிறது.. சிதம்பரம் தொகுதிக்குள் தான் கங்கை கொண்ட சோழபுரம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகப்படியான சிமெண்ட தொழிற்சாலைகள் இந்த தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் இருக்கிறது. நெல், கரும்பு, மக்காசோளம், போன்றவை அதிகமாக பயிரிடப்படுகிறது. கொள்ளிடமும், வெள்ளாறும் நீர் பாசனத்திற்கு உதவியாக உள்ளன.
சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை வன்னியர் அதிகமாக வசிக்கிறார்கள். ஆதிதிராவிடர், முதலியார், உடையார், செட்டியார், நாயுடு, பிள்ளை, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளார்கள்.. இந்த தொகுதியில் 14 லட்சத்திற்கு மேல் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. இந்த தொகுதி ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்துள்ளது. காங்கிரஸ் ஐந்து முறை வென்றுள்ளது. இங்க பாமக மூன்று முறை வென்றுள்ளது. திமுக நான்கு முறை வென்றுள்ளது. அதிமுக இரண்டு முறை வென்றுள்ளது. திமுக கூட்டணி இரண்டு முறை வென்றுள்ளது. விசிக சார்பில் திருமாவளவன் தான் சிதம்பரம் தொகுதியில் தான் நீண்ட காலமாக போட்டியிடுகிறார்.. 1999 முதல் 2019 வரை ஐந்து முறை போட்டியிட்டுள்ளார்.. ஆறாவது முறையாக இப்போதும் போட்டியிட உள்ளார். சிதம்பரம் தொகுதி திருமாவளவனின் சொந்த தொகுதியாகும்.. சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அன்னூர் அவருடைய சொந்த ஊர் ஆகும். தனது சொந்த ஊர் அடங்கிய தொகுதி என்பதால் அங்கு தான் திருமாவளவன் போட்டியிட்டு வருகிறார்.. அவர் போட்டியிட்ட எல்லா காலக்கட்டத்திலும் டாப் இரண்டு இடத்திற்குள் வந்துள்ளார்..
2004ல் திமுக கூட்டணியிடம் தோற்றாலும், அதிமுகவை தாண்டி இரண்டாவது இடத்தை பிடித்தார். 2009ல் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்றார்.. 2014ல் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் 2019ல் மீண்டும் வெற்றி பெற்றார். திருமாவளவனுக்கு பெரிய அளவில் சிதம்பரம் தொகுதியில் ஆதரவு உள்ளது. ஆனால் அவருக்கு உள்ள ஒரே பெரிய சிக்கல் என்னவென்றால் அங்கு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ள ஆதரவு தான்..
மொத்தம் உள்ள ஆறு தொகுதிகளில் அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகள் வன்னியர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இதேபோல் குன்னம், புவனகிரி தொகுதியிலு பாமகவிற்கு செல்வாக்கு அதிகம்.. இங்கு உடையார் சமுக வாக்குகளும் அதிகம் ஆகும். 2019 தேர்தலில் உடையார் சமூக வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விசிகவினரின் பிரச்சார வேன் போக முடியாத சூழல் இருந்தது..
உடையார் சமூக மக்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியினரும், வன்னியர் சமூக மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்றார்கள். இந்த முறை ஐஜேகே திமுக கூட்டணியில் இல்லாமல் இருப்பது அந்த ஒரு விஷயத்தில் பாதிப்பு இருக்கும் என்கிறார்கள்..
இதை தாண்டி திருமாவளவனுக்கு இருக்கும் பிளஸ் பாய்ண்ட் என்னவென்றால் அங்கு சிறுபான்மை இன வாக்குகள் அடுத்த லெவலில் அடர்த்தியாக இருக்கிறது.. கடந்த முறை திருமாவளவன் வெற்றி பெற்றதற்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளே காரணம் என்பதை அவரே கூறியிருந்தார்.. வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்திக்கும் போது எல்லாம் சிறுபான்மை மக்கள் வாக்குகள் எண்ணும் போது எல்லாம் லீடிங்கிற்கு திருமாவளவன் வந்துள்ளார்.. அதேபோல் திமுகவிற்கு அங்கு உள்ள செல்வாக்கும் திருமாவளவனுக்கு கைகொடுக்கும் என்கிறார்கள்..












Click it and Unblock the Notifications