பாஜக கூட்டணியில் பாமக? இன்று இறுதி முடிவை அறிவிக்கும் டாக்டர் ராமதாஸ்- தைலாபுரத்தில் பரபர ஆலோசனை!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெறுவது தொடர்பான இறுதி அறிவிப்பை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிடுவார் என்பது எதிர்பார்ப்பு.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணிகள் அமைந்துள்ளன. திமுக அணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, கொமதேக, தவாக, முஸ்லிம் லீக், மமக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதிமுக அணியில் தற்போதைய நிலையில் எஸ்டிபிஐ, புதிய பாரதம் இடம் பெறுவது உறுதியாகி உள்ளன.

தமிழக கட்சிகள் நிலைப்பாடு: பாஜக தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரன், தமாகா, பாமக, புதிய தமிழகம் கட்சி, தேமுதிக ஆகியவை தங்களது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இந்த கட்சிகள் பாஜகவா? அதிமுகவா? என முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளன. அதேபோல மக்கள் நீதி மய்யமும் எந்த முடிவையும் அறிவிக்கவும் இல்லை. நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும் என்பது உறுதியான ஒன்று. நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சியும் லோக்சபா தேர்தல் களத்தில் இணைய உள்ளது.
பாமக இன்று ஆலோசனை: இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பாமகவை பொறுத்தவரையில் திமுக கூட்டணி பக்கம் போவதற்கு முயற்சிகள் மேற்கொண்டது. இந்த முயற்சிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னெடுத்ததாகவும் ஆனால் இது கை கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது கூட்டணி குறித்த முடிவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸே தீர்மானிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவா? அதிமுகவா? எந்த கூட்டணியில் இணைவது என்கிற முடிவு எடுக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்துக்கு பாமகவும் அழைக்கப்பட்டிருந்தது. அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சர் பதவி உள்ளிட்டவைகளை கணக்கில் எடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே பாமக நீடிக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications