மீட்டிங்கிற்கு அனுமதிக்க முடியாது! சென்னையில் நட்டா நடத்த இருந்த பாஜக கூட்டம்! போலீஸ் அனுமதி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ளும் சென்னை பொதுக்கூட்டத்திற்கு போக்குவரத்து காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் வருகிற 11-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் பெருங்குடி, சோழிங்கநல்லூர், நந்தனம் ஆகிய 3 இடங்களில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, போக்குவரத்து போலீஸாரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

 Lok Sabha election 2024: Police did not allow Tamil Nadu BJP meeting leading JP Nadda in Chennai

போக்குவரத்து நெரிசல்: ஆனால், இந்த 3 இடங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெற்றால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கூறி, சென்னை காவல்துறையினர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஏற்கனவே மெட்ரோ பணிகள் நடப்பதால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஷெனாய் நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு காவல்துறைக்கு பாஜக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக மூன்றாவது அணி; இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உறுதியாக இருக்கும் அதிமுக: அதன்படி ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதனால் பாஜக தனியாக 3வது அணியை உருவாக்க முயன்று வருகிறது.

பாஜக உருவாக்கும் இந்த அணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் ஆகியோர் வழங்கும் முக்குலத்தோர் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும்.

மேலும் பாமகவின் வன்னியர் வாக்குகள், தேமுதிகவிடம் இருக்கும் 2-3 சதவிகித வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

விரும்பவில்லை; லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பாஜக உருவாக்கி இருக்கும் கூட்டணியை டெல்லி பாஜக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் அதிமுக இல்லாமல் உருவாக்கப்படும் கூட்டணியை டெல்லி பாஜக விரும்பவில்லையாம்.

இந்த நிலையில்தான் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பிப்.11-ம் தேதி சென்னை வருகை புரிய உள்ளார். பிரதமர் மோடி பிப்.25-ம் தேதி சென்னை வருகை புரிய உள்ளார். அதற்கு முன்பாக நட்டா கூட்டணியை இறுதி செய்ய உள்ளார்.

இதில் அதிமுக கூட்டணியை அவர் உறுதி செய்யும் திட்டத்தில் உள்ளாராம். அதிமுக இல்லாமல் அண்ணாமலை அனுப்பிய கூட்டணி லிஸ்டை டெல்லி பாஜக ஏற்கவில்லையாம். மோடி வருவதற்கு முன் புதிய கூட்டணியை உருவாக்குவதே நட்டாவின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக விரும்பவில்லையாம். இந்த முறை பெரும்பாலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் 40 தொகுதிகளிலும் போட்டியிடும், புதிய பாரதம் உள்ளிட்ட சிறிய கட்சிகள் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இது போக பாமக, தேமுதிகவை உள்ளே இழுக்க அதிமுக தீவிரமான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் பாஜக வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் அதிமுக உள்ளது.

கண்டிப்பு: இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய பிப்ரவரி 9ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு உள்ளதாம். நீங்கள் நடைப்பயணம் செய்தது போதும்.. உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள்.

கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+