Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்கள் தொகுதியில் யார் போட்டி? 40 நாம் தமிழர் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்த சீமான்! முழு பட்டியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னை பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு விபரம் வருமாறு:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வழக்கம்போல் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

Lok Sabha Election 2024 Seeman introduces 40 Constituency candidates for Tamil Nadu and Puducherry

இந்நிலையில் தான் 40 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடந்து வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களையும் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

யாருமே யோசிக்காத ஸ்கெட்ச்.. அத்தனை கட்சிகளுக்கும் "பாடம் கற்பிக்க" விஜய் ரசிகர்கள் வேற லெவல் திட்டம்


மேலும் நாம் தமிழர் சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழுவிபரம் வெளியாகி உள்ளது. மொத்தம் 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் சீமான் போட்டியிடாத நிலையில் பல முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக உள்ள ஹூமாயூன் கபீர், காளியம்மாள், இசை மதிவாணன் உள்பட பல நிர்வாகிகள் போட்டியிட உள்ளனர்.

மேலும் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்த வீரப்பன் மகன் வித்யா ராணிக்கும் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் சார்பில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 இடங்களில் களமிறங்கி உள்ள வேட்பாளர்களின் பெயர் விபரம் தொகுதி வாரியாக வருமாறு:

1. திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர்,

2. வடசென்னை - டாக்டர் அமுதினி

Lok Sabha Election 2024 Seeman introduces 40 Constituency candidates for Tamil Nadu and Puducherry

3. தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி

4. மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன்

5. திருப்பெரும்புதூர் - டாக்டர் வெ.ரவிச்சந்திரன்

6. காஞ்சிபுரம் (தனி) - வி.சந்தோஷ்குமார்

7. அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

8. வேலூர் - தி.மகேஷ் ஆனந்த்

9. தருமபுரி - டாக்டர் கா.அபிநயா

10. திருவண்ணாமலை - டாக்டர் ரா.ரமேஷ்பாபு

11. ஆரணி - டாக்டர் கு.பாக்கியலட்சுமி

12. விழுப்புரம் - இயக்குநர் மு.களஞ்சியம்

13. கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ. ஜெகதீசன்

14. சேலம் - டாக்டர் க. மனோஜ்குமார்

15. நாமக்கல் - க.கனிமொழி

16. ஈரோடு - டாக்டர் மு.கார்மேகன்

17. திருப்பூர் - மா.கி. சீதாலட்சுமி

18. நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார்

19. கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன்

20.பொள்ளாச்சி - டாக்டர் நா.சுரேஷ் குமார்

21. திண்டுக்கல் - டாக்டர் கைலைராஜன் துரைராஜன்

22. கரூர் - டாக்டர்ரெ.கருப்பையா

23. திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்

24. பெரம்பலூர் - இரா. தேன்மொழி

25. கடலூர் - வே.மணிவாசகன்

26. சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி

27. மயிலாடுதுறை - பி.காளியம்மாள்

28. நாகப்பட்டினம் - மு.கார்த்திகா

29. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்

30. சிவகங்கை - வி.எழிலரசி

31. மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி

32. தேனி - டாக்டர் மதன் ஜெயபால்

33. விருதுநகர் - டாக்டர் சி.கௌசிக்

34. ராமநாதபுரம் - டாக்டர் சந்திர பிரபா ஜெயபால்

35. தூத்துக்குடி - டாக்டர் ரொவினா ரூத் ஜேன்

36. தென்காசி - சி.ச. இசை மதிவாணன்

37. திருநெல்வேலி - பா.சத்யா

38. கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்

39. கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்

40. புதுச்சேரி - டாக்டர் ரா.மேனகா என மொத்தம் 40 பேர் போட்டியிட உள்ளனர்.

அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்க உள்ளது. இந்த தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக இரா. ஜெமினி போட்டியிட உள்ளார். இவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+