யாருமே யோசிக்காத ஸ்கெட்ச்.. அத்தனை கட்சிகளுக்கும் "பாடம் கற்பிக்க" விஜய் ரசிகர்கள் வேற லெவல் திட்டம்
சென்னை: வரும் லோக்சபா தேர்தல் தொடர்பாக நடிகர் விஜய் கேரளாவில் நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது வரும் தேர்தலில் திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் யாருமே யோசிக்காத திட்டத்தை முன்னெடுக்க விஜய் ரசிகர்கள் திட்டம் போட்டு கொடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசியலுக்கும் சினிமா துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதன் அடுத்த பரிணாமமாக தான் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். நீண்டகாலமாக நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைவார் என்று பல செய்திகள் வெளிவந்த நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார்.

இப்போது கட்சி தொடங்கினாலும் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. 2026ல் தமிழகத்தில் நடக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளிப்படையாகவே நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் நடிகர் விஜய் அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை ஈடுபட தொடங்கி உள்ளார். தற்போது முதற்கட்டமாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி, இணையதளத்தை விஜய் அறிமுகம் செய்துள்ளார். இதன்மூலம் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் ஏராளமானவர்கள் இணைந்து வருகின்றனர். குறிப்பாக இளம் வாக்காளர்கள் அதிகமானவர்கள் விஜயின் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து வருகின்றனர்.
‛இன்று பிரசாரத்திற்கு கிளம்புறேன்’.. மோதலுக்கு நடுவே ஸ்டாலின் கூறியதும் ‛பெஸ்ட் ஆப் லக்’ சொன்ன ஆளுநர்
இத்தகைய சூழலில் தான் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் இருந்தாலும் கூட அனைத்து கட்சிகளுக்கும் பாடம் கற்பிக்க விஜய் கட்சியினர் முடிவு செய்து பிரத்யேக திட்டம் வகுப்பதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்பது கேரளாவில் நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் பங்கேற்று வருகிறார்.
தமிழகத்தை போல் கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் சூட்டிங்கில் பங்கேற்ற நடிகர் விஜய்க்கு அங்குள்ள ரசிகர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். பொதுவாக கேரளாவை பொறுத்தமட்டில் நடிகர், நடிகைகளுக்கு பிரமாண்ட வரவேற்பை ரசிகர்கள் வழங்குவது இல்லை. ஆனால் நடிகர் விஜய்க்கு கேரளா ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்பது பிரமிக்க வைத்தது.
கூத்தாடிதான்.. இதுக்காக என்னை விஜய் ரசிகர்கள் கல்லால் அடிச்சாலும் அடிப்பாங்க! விமர்சித்த வேல்முருகன்
இதனால் விஜயும் ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. மேலும் கேரளாவில் நடிகர்களுக்கு இப்படியெல்லாம் முக்கியத்துவம் தரப் படாது என்பதால் விஜய்க்கு கொடுக்கப்பட்ட வரவேற்பும், திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டமும் மலையாள நடிகர்களை பிரமிக்க வைத்து விட்டதாம். அதிர்ச்சியுடன் அதனை மலையாள நடிகர் கவனித்ததாக சினி இண்டஸ்ரி யில் பேசுபொருளாகியிருக்கிறது.
அதேபோல கேரளாவில் இப்படி ஒரு வெறித்தனமா? என்கிற பார்வையில் நடிகர் விஜய்யும் பிரமித்திருக்கிறார் என்கிறார்கள் தமிழக வெற்றிக் கழகத்தினர். இந்த நிலையில் தான் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை நடிகர் விஜய் கேரளாவுக்கு அழைத்து வரும் லோக்சபா தேர்தல் தொடர்பாக ரகசியமாக விவாதித்துள்ளார்.
அப்போது தான் விஜய் கட்சியினர் புதிய ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளனர். அதாவது வரும் லோக்சபா தேர்தலிலேயே நமது பலத்தை அறிய வேண்டும். இது எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு நமது செயல்பாட்டை எப்படி மேம்படுத்துவது என்பதற்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதன்படி வரும் லோக்சபா தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்து நம் வலிமையை காட்டுவோம் என ஒருதரப்பினர் சொல்லியிருக்கிறார்கள்.
இன்னொரு தரப்போ, தேர்தலை புறக்கணிப்பதாக வெளிப்படையாக அறிவிப்போம். இதன்மூலம் லோக்சபா தேர்தலில் திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் எவ்வளவுதான் ஓட்டுகளை பெறுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தும் விதமாக இந்த புறக்கணிப்பைச் செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்ட நடிகர் விஜய் விரைவில் இதுதொடர்பாக மாநில நிர்வாகிகளிடம் கலந்து பேசுகிறேன். அதன்பிறகு ஒரு முடிவை எடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறாராம் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். ஆனால் இதில் 2வது தேர்தலை புறக்கணிப்போம் என்ற முடிவை எடுத்தால் அது நடிகர் விஜய் மீது எதிர்மறை கருத்தை ஏற்படுத்தும். இதனால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் பார்க்கலாம் வரும் லோக்சபா தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் என்ன செய்கிறது என்று.












Click it and Unblock the Notifications