தென் சென்னை தொகுதி: திமுகவின் கோட்டையில் மீண்டும் கொடியை பறக்க விடுவாரா தமிழச்சி தங்கபாண்டியன்!
தென் சென்னை: நாட்டின் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், தமிழ்நாட்டின் முதல்வர் பேரறிஞர் அண்ணா போட்டியிட்டு வென்ற தொகுதி தென் சென்னை. இத்தொகுதியின் நிலவரத்தை பார்ப்போம்.
தென் சென்னை தொகுதி அறிமுகம்: தென்சென்னை லோக்சபா தொகுதியான கலவையான வாக்காளர்களைக் கொண்டது. பிராமணர்கள் உள்ளிட்ட பல்வேறு ஜாதியினர், சென்னையின் பூர்வகுடி தலித்துகள், வெளி மாவட்ட ஊழியர்கள், வெளி மாநில தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களையும் கொண்ட தொகுதி.

தென் சென்னை லோக்சபா தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை: 20,07,816; ஆண் வாக்காளர்கள்: 9,93,590; பெண் வாக்காளர்கள்: 10,13,772; 3-ம் பாலினத்தவர்- 454.
தென் சென்னை லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்: விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர்.
தென் சென்னை லோக்சபா தொகுதி எப்போதும் விஐபி தொகுதியாகவே இருந்து வருகிறது. இத்தொகுதியில் திமுக 9 முறையும் காங்கிரஸ் 5 முறையும் வென்றுள்ளது. அதிமுக 3 முறை தென் சென்னையைக் கைப்பற்றியிருக்கிறது. திமுகவின் பேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன், டிஆர் பாலு, காங்கிரஸின் டிடி கிருஷ்ணமாச்சாரி, ஆர்.வெங்கட்ராஜன், வைஜெயந்தி மாலா ஆகியோர் வென்ற தொகுதி.
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:
இராஜேந்திரன்(அதிமுக) 3,08,567
பாரதி(திமுக) 2,75,632
கோபிநாத் (தேமுதிக) 67,291
இல. கணேசன்( பாஜக) 42,925
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ஜெயவர்த்தன்(அதிமுக) 4,38,404
டி. கே. எஸ். இளங்கோவன்( திமுக) 3,01,779
இல. கணேசன் பாஜக (2,56,786)
ரமணி (காங்கிரஸ்) 24,420
2019-ம் ஆண்டு திருவள்ளூர் லோக்சபா தொகுதி முடிவுகள்
தமிழச்சி தங்கப்பாண்டியன் ( திமுக) 5,64,872
ஜெயவர்த்தன்(அதிமுக) 3,02,649
ரங்கராஜன் (மக்கள் நீதி மய்யம)1,35,465
ஷெரின் (நாம் தமிழர் கட்சி) 50,222.
2024-ம் ஆண்டு களம் காணும் வேட்பாளர்கள்
தமிழச்சி தங்கப்பாண்டியன் - திமுக
ஜெயவர்த்தன்- அதிமுக
தமிழிசை சவுந்தரராஜன்- பாஜக
தமிழ்ச் செல்வி- நாம் தமிழர் கட்சி
திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப் பாண்டியன், மூத்த திமுக தலைவர் தங்கபாண்டியன் மகள்; தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி; பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மகள். அதிமுகவின் ஜெயவர்தன், அதிமுக மூத்த தலைவர் டி.ஜெயக்குமார் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் சென்னை பிரச்சனைகள் என்ன?; கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பிரம்மாண்ட வர்த்தக நிறுவனங்களை உள்ளடக்கியது தென் சென்னை தொகுதி. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டிருப்பது தென் சென்னை. வர்த்தக மையங்களான தியாகராயர் நகரும் கோயம்பேடும் தென் சென்னையில்தான் இருக்கின்றன. பொதுவாக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பெருங்குடி குப்பை மேடு, பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு, பறக்கும் ரயில் திட்டம் முழுமையடைதல், வெள்ள நீர் வடிகால் ஆகியவை தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள்.
தென் சென்னை தொகுதி நிலவரம்: 2014-ல் வென்று 2019-ல் தோற்ற ஜெயவர்தன் 3-வது முறையாக மீண்டும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். 2019-ல் வென்ற திமுகவின் தமிழச்சி தங்க பாண்டியன் 2-வது முறையாக களம் காண்கிறார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவின் வேட்பாளராக டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி விவிஐபி தொகுதியாகிவிட்டது. வென்றாக வேண்டிய நெருக்கடியில் திமுகவின் தமிழச்சியும் திமுகவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் பாஜக, அதிமுகவின் தமிழிசை, ஜெயவர்தனும் போராடுகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications