2024 தேர்தலுக்கு பின் நாம் தமிழர் கட்சியே காணாமல் போகும்- சீமான் மீது அண்ணாமலை திடீர் பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024-ம் ஆண்டுக்கு பின் சீமானின் நாம் தமிழர் கட்சியே இருக்காது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது: நாம் தமிழரை விட 1% கூடுதல் வாக்குகளை பாஜக வாங்க முடியுமா? என சீமான் விடுத்திருக்கும் சவாலை ஏற்க தயார். 1% என்ன 30% கூடுதலாகவே வாக்குகளை வாங்கி காட்டுவோம். நாம் தமிழர் என்ற கட்சி 2024-க்கு பின் இருக்காது. எத்தனை நாளைக்கு வெறுப்பை விதைத்து ஒரு கட்சியை நடத்த முடியும்? இளைஞர்களிடம் வெறுப்பைதான் நாம் தமிழர் கட்சி விதைக்கிறது.

Lok Sabha Election 2024: TN BJP leader Annamalai slams Naam Tamilar Seeman

அதாவது நாம் தமிழர் கட்சியால் என்ன செய்ய முடியும்? நாம் தமிழர் கட்சியா மத்தியில் ஆட்சியில் இருக்கிறது? நாம் தமிழர் கட்சியா மாநிலத்தில் ஆட்சியக்கு வரப் போறாங்களா? கொள்கைகளே இல்லை.

சீமானுடன் யாரும் போனாங்களா? அவங்க கூட கட்சியே இல்லையே? தனியா நிற்பாரே..ஏன் தனியா நிற்கலைன்னா யாரும் சீமானை சேர்த்துக்கலை.. தனியா சீமான் நிற்பது பெரிய கொள்கையாக பார்க்காதீங்க.. யாருமே சேர்த்துக்கலை. தேர்தல் என வரும் போது மக்கள் யார் ஆட்சிக்கு வருகிறார்கள்? என்றுதான் பார்ப்பாங்க. யார் மத்தியில் ஆட்சிக்கு வருவாங்க? மாநிலத்தில் ஆட்சிக்கு வருவாங்க? என்றுதான் மக்கள் பார்ப்பார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு சீமான் தந்த பதில்: நாம் தமிழர் கட்சிக்கு 7% வாக்குகள் இருக்கிறது. எங்களைவிட 30% வாக்குகள் கூடுதலாக பாஜக பெறும் என்கிறார் அண்ணாமலை. அதாவது 37% வாக்குகள் பெற முடியும் என்றால் அண்ணா திமுகவுடன் பாஜகவுக்கு கூட்டணி தேவை இல்லையே? 37% பெற முடியும் என்றால் தனித்து நின்றே ஆட்சி அமைக்கலாமே எதற்கு கூட்டணி? வெறுப்பின் விதை வேர், செடி, பூ, காய் அத்தனையுமே பாஜகதான். நாம் தமிழர் அல்ல. நான் முன்வைக்கும் மொழி, இன அரசியல் வெறுப்பு எனில் ஏன் மொழி வழி மாநிலங்களை பிரித்தீர்கள்? எல்லா நாடுகளிலும் மொழிவழி தேசிய இனங்கள்தான். 2024 தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறும். அதன் பிறகு யார் இருப்பார்கள்? என பார்ப்போம். இவ்வாறு சீமான் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+