'அதிமுக' தைரியம்.. 'திமுக' கூட்டணியில் 'திரியை' கொளுத்திய சிபிஎம்! ஸ்டாலின் சந்திப்பு கண் துடைப்பு?
சென்னை: திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று சந்தித்து லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.
லோக்சபா தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியதில் அதிமுக உறுதியாக உள்ளது.

அதிமுக நிலைப்பாடு: அதிமுகவின் இந்த உறுதியான நிலைப்பாட்டால் வலிமையாக உள்ள திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்த முடியுமா? என்பது அக்கட்சியின் எதிர்பார்ப்பு. காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் என ஒவ்வொரு கட்சியாக ஏதேனும் ஒருவகையில் தூது விடுவது, அசைத்துப் பார்ப்பது என்கிற பகீரத முயற்சிகளில் அதிமுக தீவிரமாக இறங்கியும் உள்ளது.
அதிமுகவால் ஊசலாட்டம்?: பாஜகவுடனான கூட்டணியில் அதிமுக இல்லை என்பதால் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் ஒருவித ஊசலாட்டங்களுடன் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் இருப்பதும் வெளிப்பட்டு வருகிறது.
எடப்பாடிக்கு சிபிஎம் முக்கியத்துவம்: திமுக கூட்டணியில் உள்ள சிஎபிம் கட்சி, பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை தங்களது தீக்கதிர் நாளேட்டில் 8 கால செய்தியாக வெளியிட்டதைக் கூட ஒரு வித ஊசலாட்டமாகவே அரசியல் பார்வையாளர்கள் பார்க்கின்றனர். கடந்த தேர்தலில் போட்டியிட்டதைவிட கூடுதல் தொகுதிகளை சிபிஎம் எதிர்பார்த்தாலும் திமுக தலைமை தர தயாராக இல்லை என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டதாம். இந்த வருத்தத்தைத்தான் இப்படி ஊசலாட்ட செய்திகள் மூலம் வெளிப்படுத்தியதாம் சிபிஎம். ஆனால் சிபிஎம் நிலைப்பாடு தொடர்பாக திமுக தலைமையும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
முதல்வருடன்ன் திடீர் சந்திப்பு: இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சிபிஎம் மாநில தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஆசிரியர்- அரசு ஊழியர் கோரிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் பேசியதாக கூறப்பட்டது.
கூடுதல் தொகுதி கேட்போம்: இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக கூட்டணியில் லோக்சபா தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்க முடிவு செய்துள்ளோம். அதற்காக அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. திமுக தலைமையிலான கூட்டணியில் சிபிஎம் தொடர்ந்து நீடிக்கும் என்றார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications