தமிழகத்துக்கு ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல்.. ஒரே கட்டமாக நடைபெறுகிறது! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது ஜுன் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இன்று மதியம் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நம் நாட்டில் 5 ஆண்டுக்கு ஒரு முறை லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதற்கு முன்பு கடந்த 2019ல் லோக்சபா தேர்தல் நடந்தது. அப்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 16ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் லோக்சபா தேர்தல் நடத்தப்பட உள்ளது.

Lok Sabha Election 2024 to be held in Tamil Nadu on April 19 with single phase announced by election commission

லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. மாநிலங்கள் வாரியாக அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி இன்று மதியம் 3 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் அவர்கள் லோக்சபா தேர்தல் தேதி, வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி, ரிசல்ட் தேதிகளை அறிவித்தனர்.

மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் தேதி நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை என்பது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்ய மார்ச் 27 ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை என்பது மார்ச் 28 ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு வாபஸ் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 19 ம் தேதி 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது ஜுன் 4ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேதிகள் தான் புதுச்சேரிக்கும் பொருந்தும்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் தேனியை (ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி) தவிர 38 தொகுதிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றி இருந்தன. இந்த முறை தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி, புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 இடங்களையும் கைப்பற்ற முதல்வர் ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.

வரும் லோக்சபா தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் களமிறங்க உள்ளது. அதேபோல் காங்கிரஸ் புதுச்சேரி + தமிழ்நாட்டில் 9 இடங்கள் என மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மதிமுக ஒரு தொகுதியில் களமிறங்க உள்ளது. இந்த 3 கட்சிகளின் தொகுதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

அதேவேளையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் என தலா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மீண்டும் ராமநாதபுரத்திலும், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி மீண்டும் நாமக்கல் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அதேபோல் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி இந்த 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. அதிமுக, பாஜக ஆகியவற்றின் கூட்டணிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதனால் இழுபறி நிலவி வருகிறது. இதுதவிர வழக்கம்போல் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்குகிறது. இதனால் வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+