திமுகவின் 21 வேட்பாளர்கள்.. எந்த ஜாதிக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது தெரியுமா?
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 21 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
தமிழ்நாடு தேர்தல் களத்தில் ஜாதி, மதங்களைக் கடந்து கட்சிகள்தான் பிரதானமாக அடையாளப்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் தொகுதிகளில் பெரும்பான்மை ஜாதியை அடிப்படையாக வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்வதும் வழக்கம்.

தற்போதைய லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திமுக வேட்பாளர்களில் 5 பேர் வன்னியர் ஜாதியைச் சேர்ந்தவர்கள்; அடுத்ததாக முக்குலத்தோர் ஜாதியை (தேவர், கள்ளர்) சேர்ந்த 4 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கவுண்டர் ஜாதியை சேர்ந்த 3 பேரை திமுக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
திமுக வேட்பாளர்களும் ஜாதி விவரமும்:
1. திருபெரும்புதூர் - டி.ஆர்.பாலு (தேவர்)
2. தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி (இசை வேளாளர்)
3. நீலகிரி (தனி) - ஆ.ராசா (தலித்)
4. மத்திய சென்னை - தயாநிதி மாறன் (இசை வேளாளர்)
5. அரக்கோணம் - எஸ். ஜெகத்ரட்சகன் (வன்னியர்)
6. வட சென்னை - Dr கலாநிதி வீராசாமி (நாயுடு)
7. தென் சென்னை - தமிழச்சி தங்கப்பாண்டியன் (தேவர்)
8. காஞ்சிபுரம் ( தனி) - க.செல்வம் (தலித்)
9. வேலூர் - கதிர் ஆனந்த் (வன்னியர்)
10. தருமபுரி - வழக்கறிஞர் அ.மணி (வன்னியர்)
11. திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை (அகமுடைய முதலியார்)
12. ஆரணி - தரணி வேந்தன் (வன்னியர்)
13. கள்ளக்குறிச்சி - தே.மலையரசன் (பார்க்கவர்)
14. சேலம் - டி. எம். செல்வகணபதி (வன்னியர்)
15. ஈரோடு - கே.இ.பிரகாஷ் (கவுண்டர்)
16. கோவை - கணபதி பி.ராஜ்குமார் (கவுண்டர்)
17. பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி (கவுண்டர்)
18. பெரம்பலூர் - அருண் நேரு (ரெட்டியார்)
19. தஞ்சாவூர் - முரசொலி (கள்ளர்)
20. தேனி - தங்க தமிழ்ச்செல்வன் (கள்ளர்)
21. தென்காசி (தனி) - Dr ராணி ஸ்ரீகுமார் (தலித்)
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு?












Click it and Unblock the Notifications