தயாநிதி மாறன் வேற இருக்காரே.. 2 தொகுதியில் திமுக - 3 இடத்தில் காங்கிரசுடன் மல்லுக்கட்டும் தேமுதிக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மொத்தம் 5 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 தொகுதியில் நேரடியாக திமுகவுடனும், 3 தொகுதிகளில் நேரடியாக காங்கிரஸ் கட்சியுடனும் தேமுதிக மோத உள்ளது.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக இடம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 லோக்சபா தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது. ஆனால் அதிமுக தரப்பில் ராஜ்யசபா சீட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் 5 லோக்சபா தொகுதிகளை ஒதுக்க ஒப்புக்கொண்டது.

Lok Sabha Election 2024 Vijayakanth s DMDK will contest 5 seat and direct fight with DMK and Congress

தேமுதிகவுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதி.. கள்ளக்குறிச்சி இல்லை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த எடப்பாடி


இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), கடலூர், தஞ்சாவூர், மத்திய சென்னை, விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக கேட்ட நிலையில் அது வழங்கப்படவில்லை. இந்த தொகுதியில் பிரேமலதாவின் தம்பி சுதீஷ் விருப்பமனு செய்திருந்தார். ஆனால் கடைசியில் அதிமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படவில்லை.

2026ல் நான் யாருனு காட்டுவேன்! அதிமுக வேட்பாளராகவே ஓபிஎஸ் போட்டியிடுவார் - பரபரப்பை கிளப்பிய சசிகலா


இந்நிலையில் தான் தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகளில் 2 இடங்களில் திமுகவையும், 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியையும் நேரடியாக சந்திக்க உள்ளது. அதன்படி மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி தயாநிதி மாறனையும், தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் முரசொலியையும் தேமுதிக எதிர்க்க உள்ளார்.

அதேபோல் திருவள்ளூர் (தனி), கடலூர், விருதுநகர் லோக்சபா தொகுதிகளில் தேமுதிக திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்க்க உள்ளது. அதன்படி திருவள்ளூர் தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக ஜெயக்குமார் உள்ளார். வரும் தேர்தலில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜெயக்குமாருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக கர்நாடகா முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது. இது நடந்தால் தேமுதிக வேட்பாளர் சசிகாந்த் செந்திலை எதிர்க்க வேண்டி இருக்கும்.

மீண்டும் பெரம்பலூரில் பாரிவேந்தர்? பாஜக கூட்டணியில் ஐஜேகேவுக்கு ஒரு தொகுதி.. ஒப்பந்தம் கையெழுத்து


மேலும் விருதுநகர் தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் மாணிக்கம் தாகூரே போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதனால் சிட்டிங் எம்பியை தேமுதிக வேட்பாளர் எதிர்க்க வேண்டி இருக்கும்.

விருதுநகர் தொகுதியை பொறுத்தமட்டில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் VS மாணிக்கம் தாகூர் என்று போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேபோல் கடலூர் தொகுதியும் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கேஎஸ் அழகிரி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த 5 தொகுதிகளிலும் பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர். இதனால் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற தேமுதிக கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+