மீண்டும் பெரம்பலூரில் பாரிவேந்தர்? பாஜக கூட்டணியில் ஐஜேகேவுக்கு ஒரு தொகுதி.. ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் ஐஜேகே எனும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தருக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது சிட்டிங் எம்பியாக உள்ள பெரம்பலூரில் மீண்டும் களமிறங்குகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி பங்கீடு செய்யும் பணிகளில் அதிமுக, பாஜக வேகமாக செயல்பட்டு வருகின்றன.

வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக, பாஜகவிடம் இருந்த விலகி உள்ளார். பாஜக உடனான கூட்டணியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முறித்துள்ளார். இதனால் பாஜக புதிய கூட்டணியை அமைத்துள்ளது.
தேமுதிகவுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதி.. கள்ளக்குறிச்சி இல்லை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த எடப்பாடி
வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணி, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, பெரம்பலூர் எம்பி பாரி வேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியின் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன.
இதில் ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணி மற்றும் ஜிகேவாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டுகளில் பாஜகவுக்கு பிரச்சனை உள்ளது. மாறாக பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதியும், ஜான்பாண்டியன், தேவநாதன் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான தொகுதி இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
பாஜக கூட்டணியில் 2 தொகுதி தான்! 9 வேட்பாளர் ரெடினு கூறிய டிடிவி தினகரன் மனம் மாறியது ஏன்? விளக்கம்
இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சிக்கு தமிழகத்தில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாஜக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இன்று இரவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இருப்பினும் பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது? என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அந்த கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தற்போது பெரம்பலூர் தொகுதியின் சிட்டிங் எம்பியாக உள்ளார். இவர் கடந்த முறை இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
தற்போது திமுக கூட்டணியை முறித்து பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். அதோடு மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட பாரிவேந்தர் ஆர்வமாக உள்ளார். இதனால் பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி என்பது ஒதுக்கீடு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இது நடக்கும் பட்சத்தில் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் திமுக வேட்பாளரான அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேருவை எதிர்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications