பாஜக கூட்டணியில் 2 தொகுதி தான்! 9 வேட்பாளர் ரெடினு கூறிய டிடிவி தினகரன் மனம் மாறியது ஏன்? விளக்கம்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர் இருப்பதாக டிடிவி தினகரன் கூறிய நிலையில் அவரது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பாஜக 2 தொகுதிகளை மட்டுமே வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் பாஜக கூட்டணி பங்கீட்டில் என்ன நடந்தது? 2 தொகுதியை பெற்றது ஏன்? என்பது பற்றி கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியின் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் பாஜக - அமமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானாலும் கூட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் 2 தொகுதிகளின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதுபற்றி விரைவில் பாஜக அறிவிப்பு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளின் விபரங்களை பாஜக முழுமையாக நாளை வெளியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தொகுதி பங்கீட்டுக்கு பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக கூட்டணியில் அமமுக கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லையா? தொகுதிகளின் எண்ணிக்கை குறைத்து வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு டிடிவி தினகரன் பதிலளித்தார். அவர் கூறியதாவது:
‛போதும் என்ற மனமே பொன்செய் மருந்து' என சொல்வார்கள். நாங்கள் பாஜகவிடம் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். 9 தொகுதி தந்தாலும் நாங்கள் போட்டியிட தயாராக இருக்கிறோம் எனக்கூறினோம். மேலும் விருப்பப்பட்ட தொகுதியை கேட்டோம். அதோடு வேறு கட்சிகள் எங்களின் தொகுதிகளை கேட்டால் அதுபற்றி இறுதி முடிவு எடுக்கலாம் என முதலிலேயே மத்திய அமைச்சர் எல் முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடம் தெரிவித்து இருந்தேன்.
முதலில் அவர்கள் என்னிடம் வேறு ஒரு நம்பரை (தொகுதி எண்ணிக்கை) கூறியிருந்தார்கள். அதற்கு நானும் சம்மதம் சொன்னேன். மேலும் கூட்டணிக்கு வரவர கட்சிகள் அதிகரித்தன. இதையடுத்து அவர்கள் என்னிடம் பேசினர். நான் தொகுதிகளை விட்டு கொடுத்தேன். கடைசியாக 2 தொகுதிகளை தந்தனர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஒரு தொகுதியை மட்டும் தாங்க.. இன்னொரு தொகுதியை வேறு கூட்டணி கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்றால் கொடுங்கள் என்றோம். ஆனால் குறைந்தபட்சம் 2 தொகுதியிலாவது போட்டியட வேண்டும் எனக்கூறி 2 தொகுதியை தந்துள்ளனர்'' என்றார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications