எம்ஜிஆரின் செல்லப் பிள்ளை.. தனிக்கட்சி.. திமுகவின் 4முறை எம்பி.. யார் இந்த ஜெகத்ரட்சகன்?
சென்னை: அரக்கோணம் லோக்சபா தொகுதியில் 4-வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெகத்ரட்சகன்.
எம்ஜிஆர் காலத்தில் அவரது செல்லப் பிள்ளைகளில் ஒருவராக இருந்தவர் ஜெகத்ரட்சகன். 1984-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு அதிமுக எம்பியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். 1985-89-ல் அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் இருந்தார்.

வீர வன்னியர் பேரவை என்ற இயக்கத்தை தொடங்கியவர்; பின்னர் ஜனநாயக முன்னேற்றக் கழகம் என கட்சியாக மாற்றினார். 2004-ல் இந்த கட்சி திமுகவுடன் இணைந்தது. 1999, 2009-ல் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்பியானார். 2014-ல் ஶ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2019-ல் மீண்டும் அரக்கோணத்தில் போட்டியிட்டு எம்பியானார். தற்போதும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார் ஜெகத்ரட்சகன்.
லோக்சபா எம்பியாக இருந்த காலத்தில் மத்திய அரசின் பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்தார். மத்திய அமைச்சர் பதவியையும் வகித்திருந்தார். பாலாஜி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டா ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். நிலக்கரி சுரங்க முறைகேடு புகாரிலும் சிக்கியிருந்தார் ஜெகத்ரட்சகன். வருமா வரி, அமலாக்கத்துறை சோதனைகளுக்குள்ளானவர். புதுவையில் திமுகவின் முதல்வர் வேட்பாளராக பேசப்பட்டவர்.
லோக்சபா தேர்தல்களில் அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் பெற்ற வாக்குகள்:
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஜெகத்ரட்சகன்(திமுக) 4,15,041
வேலு (பாமக) 3,05,245
சங்கர்(தேமுதிக) 82,038
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஜெகத்ரட்சகன் (திமுக) - 6,72,190
ஏகே மூர்த்தி (பாமக)- 3,43,234
பார்த்திபன் (அமமுக)- 66,826
பாவேந்தன் (நாம் தமிழர் கட்சி) 29,347
ராஜேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) 23
2024 தேர்தல் முடிவுகள்
ஜெகத்ரட்சகன் (திமுக) 563216
விஜயன் (அதிமுக) 256657
பாலு (பாமக) 202325
அப்சியா நஸ்ரின் (நாம் தமிழர்) 98944
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications