அரசியல் வாரிசுக்கு அப்பால்.. 4 முறை மத்திய சென்னையில் வென்ற மாஜி மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்!
சென்னை: மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர் தயாநிதி மாறன். கருணாநிதியின் சகோதரி மகனும் திமுக- கருணாநிதியின் மனசாட்சியுமாக திகழ்ந்து மறைந்த முரசொலி மாறனின் இளைய மகன் தயாநிதி மாறன். தயாநிதி மாறனின் மனைவி பெயர் பிரியா. மகன் பெயர கரண் மாறன்; மகள் பெயர் திவ்யா மாறன்.

தந்தை முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னரே அரசியலுக்கு வந்தவர் தயாநிதி மாறன். 1966-ம் ஆண்டு பிறந்த தயாநிதி மாறன் 2004-ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். தாம் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வென்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரானார். 2009-ம் ஆண்டு தேர்தலிலும் வென்று மத்திய ஜவுளித்துறை அமைச்சரானார் தயாநிதி மாறன். ஆனால் முறைகேடு புகார்களால் 2011-ல் தமது பதவியை தயாநிதி மாறன் ராஜினாமா செய்தார்.
2014-ல் மத்திய சென்னையில் போட்டியிட்ட தயாநிதி தோல்வியைத் தழுவினார். ஆனால் 2019, 2024 லோக்சபா தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வென்றுள்ளார்.
தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன், தென்னிந்தியாவில் கோலோச்சும் சன் குழுமங்களின் அதிபராவார். தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த மத்திய அரசின் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சன் குழுமத்துக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக வழக்கும் தொடரப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல்களும் தயாநிதி மாறன் பெற்ற வாக்குகளும்:
004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன் (திமுக) - 3,16,329
பாலகங்கா (அதிமுக) - 1,82,151
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன்( திமுக) 2,85,783
முகமது அலி ஜின்னா (அதிமுக)2,52,329
இராமகிருட்டிணன்(தேமுதிக)38,959
ஹைதர்அலி (மனிதநேய மக்கள் கட்சி) 13,160
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
விஜயகுமார்(அதிமுக) 3,33,296
தயாநிதிமாறன்(திமுக) 2,87,455
ரவீந்திரன்(தே.மு.தி.க)1,14,798
மெய்யப்பன்(காங்) 25,981
ஜெ. பிரபாகர் (ஆம் ஆத்மி)19,553
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன்(திமுக) 4,48,911
சாம்பவுல்(பாமக) 1,47,391
கமீலா நாசர் (மக்கள் நீதி மய்யம்)
92,249 கார்த்திகேயன்(நாம் தமிழர் கட்சி) 30,886
2024-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன் (திமுக) 413848
வினோஜ் (பாஜக) 169159
பார்த்தசாரதி (தேமுதிக) 72016
கார்த்திகேயன் (நாம் தமிழர்) 46031












Click it and Unblock the Notifications