வேலூரில் வெற்றி யாருக்கு.. ஏசி சண்முகம் vs கதிர் ஆனந்த் இடையே கடும் போட்டி.. தந்தி டிவி சர்வே
சென்னை: வேலூர் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏசி சண்முகம் - திமுக கதிர் ஆனந்த் இடையே கடும் போட்டி நிலவும் என்று தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்துள்ளன.

நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகள் உள்ளன.
பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, ஓபிஎஸ், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய உள்ளது.
இதனிடையே, லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி வேலூர் தொகுதியில் தந்தி டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கலாம்.
இதனிடையே, லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி வேலூர் தொகுதியில் தந்தி டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கலாம்.
வேலூர் தொகுதியில் புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுகவில் அமைச்சர் துரைமுருகனின் மகனும் சிட்டிங் எம்பியுமான கதிர் ஆனந்த், அதிமுகவில் பசுபதியும் நாம் தமிழர் கட்சியில் மகேஸ் குமாரும் போட்டியிடுகிறார்கள். வேலூர் தொகுதியில் கடந்த முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏசி சண்முகம் இந்த முறை தாமரையில் போட்டியிடுகிறார்.
தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி வேலூர் தொகுதிதியில் கடும் போட்டி நிலவும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனினும் இந்த ரேசில் ஏசி சண்முகம் சற்று மேலோங்கி காணப்படுகிறார். இரண்டாவது இடத்தில் திமுக உள்ளது. அதிமுக மூன்றாம் இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாம்.. எனினும், வேலூர் தொகுதியை பொருத்தவரை கடும் போட்டி நிலவுவதால் எந்த பக்கமும் போகலாம்.. அதாவது, முதல் இரண்டு இடங்களில் உள்ள பாஜக- திமுக ஆகியவை இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பதே தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவாக உள்ளது.
தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்:
புதிய நீதிக்கட்சி: 32%-38%
திமுக: 31%-37
அதிமுக: 22%-28%
நாம் தமிழர்: 5%-8%
மற்றவை: 1%3%
மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு விவரங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications