சிதம்பரம் தொகுதியில் பாமக போட்டியிடாமல் பாஜக களமிறங்கியது ஏன்.. திருமாவிற்கு இப்படியொரு ஸ்கெட்ச்
சென்னை: சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களம் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனுக்கு எதிராக போட்டியிடும் வாய்ப்பை பாமகவிற்கு தராமல் பாஜக எடுத்துக்கொண்டு வேட்பாளரை அறிவித்தது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப் பட்டன. இதில், திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியும் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த தொகுதியை பாஜக எடுத்துக்கொண்டது.

இதற்கு காரணம், பாஜகவில் உள்ள பட்டியலினத்தை சேர்ந்த தடா பெரியசாமி தான் என்று சொல்லப்படுகிறது. திருமாவளவனுக்கு எதிராக பாமக போட்டியிட்டால் பட்டியிலினத்தவர்கள் ஒன்றாகி எதிர்த்துதான் ஓட்டுப் போடுவார்கள். ஏனெனில், திருமாவளவன் ஜெயிக்க வேண்டும் என சிறுத்தைகளுக்கு மட்டும்தான் ஆர்வம் இருக்கிறது. ஆனால், பட்டியிலின மக்களிடம் அந்த ஆதரவு இல்லை.
திருமாவளவன் மீது ஒரு பிரிவு பட்டியலின மக்களே அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதனால் அரசியல் கலப்பில்லாத அந்த இன மக்கள் திருமாவுக்கு இந்த முறை வாக்களிக்க மாட்டோம் என்கிற சிந்தனையில் இருக்கின்றனர். இந்த சூழலில், திருமாவை எதிர்த்து பாமக போட்டியிட்டால், பாமகவை வீழ்த்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை பட்டியலின மக்களிடையே விடுதலை சிறுத்தைகள் கொண்டு செல்வார்கள்.
அதிருப்தியில் இருக்கும் பட்டியலினத்தவர் எல்லாம் ஒன்றாகி திருமாவிற்கே ஓட்டு போட்டாலும் ஆச்சரியமில்லை. திருமாவா? பா.ம.கா.வா? என்று வரும்போது பாமகவை வீழ்த்த வேண்டும் என்றுதான் கணிசமான தலித் மக்கள் நினைப்பது கடந்த கால தேர்தல்களில் நாம் கற்ற பாடம்.
அதேபோல, பாமக மீதும், திருமா மீதும் மாற்று சாதியிலும் கணிசமானோர் நல்ல அபிப்ராயம் இல்லாமல் உள்ளனர். இதனை நாம் அறுவடை செய்ய வேண்டுமானால் பாஜக போட்டியிடுவதுதான் நல்லது. மாற்று சமூகத்தின் வாக்குகளை நாம் பெறுவதும், திருமா தோற்பதும் ஒரே சமயத்தில் நடக்கும் என தடா பெரியசாமி பாமகவிடமும், பாஜகவிடமும் பேசியதால்தான் சிதம்பரம் தொகுதி பாமகவிடமிருந்து மாற்றப்பட்டது என்கிறார்கள் இரு கட்சியின் மேலிட தொடர்பாளர்கள்.
இந்த நிலையில்தான் சிதம்பரம் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக பி கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.இவர் அதிமுகவின் முக்கிய பிரமுகராக இருந்தவர். வேலூர் மேயராக இருந்தவர் என்பது நினைவுகூறத்தக்கதாகும்.
-
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications