கையில் ‛வாக்கிங் ஸ்டிக்’.. நடக்கவே கஷ்டப்படும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்! என்னாச்சு?
சென்னை: தென்சென்னை லோக்சபா தேர்தலில் சிட்டிங் எம்பியாக தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். தற்போது அவர் நடக்க முடியாமல் கையில் ‛வாக்கிங் ஸ்டிக்' உதவியோடு செல்வதும், அவரது காலில் கட்டும்போடப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்நிலையில் தான் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன.

தென்சென்னை லோக்சபா தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளார். இவர் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி ஆவார்.
இந்த தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தொகுதியின் முன்னாள் எம்பியும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்த்தன் களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வரும் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். நேற்று முன்தினம் முதல் அவர் சைதாப்பேட்டையில் அமைச்சர் மா சுப்பிரமணியனுடன் சேர்ந்து பிரசாரத்தை தொடங்கினார். அதன்பிறகு நேற்று மைலாப்பூர் சட்டசபை தொகுதியில் பிரசாரம் செய்தார்.
இந்த வேளையில் தமிழச்சி தங்கபாண்டியன் நடக்க முடியாமல் நடந்து சென்றார். மேலும் அவரது ஒரு காலில் கட்டுப்போடப்பட்டு இருந்த நிலையில் கையில் ‛வாக்கிங் ஸ்டிக்' வைத்திருந்தார். ‛வாக்கிங் ஸ்டிக்' உதவியுடன் தான் அவர் நடந்து சென்றார். இதனால் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் தான் கையில் ‛வாக்கிங் ஸ்டிக்' வைத்திருப்பது பற்றி தமிழச்சி தங்கபாண்டியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‛‛நேற்று வேட்பாளருக்கான கட்டடம் திறக்கும்போது ஸ்லிப் ஆகிவிட்டது. இதனால் வலது காலில் fracture ஆகிவிட்டது. 3 வாரம் ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு ஓய்வு எடுக்க முடியாது. அதனால் காயத்துடன் பயணம் செய்கிறோம்'' என்றார்.
முன்னதாக தென்சென்னை தொகுதியில் திமுகவில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் வழங்கிய பிரமாணப்பத்திரத்தில் தன்மீது எந்த குற்றவியல் வழக்கும் இல்லை. தனது பெயரில் ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், ரூ.8 கோடியே 97 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகளையும் வைத்துள்ளாக கூறியுள்ளார்.
அதோடு தன்னிடம் இன்னோவா கிரிஸ்டா ரக காரும். டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கும் தனது பெயரில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதவிர மொத்தம் ரூ.15 லட்சம் கடன் உள்ளதாகவும், இதில் ரூ.10 லட்சம் தனது சகோதரரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி 1 கிலோ 270 கிராம் தங்கமும். 1.5 கிலோ வெள்ளியும் வைத்துள்ளதாக வேட்புமனுவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications