சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
சென்னை: லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்தை முன்வைத்து நேற்றும் இன்றும் சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பாஜகவில் இருந்து கொண்டே பாஜகவை விமர்சிக்கும் சிரிப்பு நடிகர் எஸ்வி சேகர் புரியாத புதிராக பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
லோக்சபா தேர்தலில் கரும்பு விவசாயி சின்னமே கிடைக்கும் என்பது சீமானின் பெரும் நம்பிக்கையாக இருந்தது. நாம் தமிழர் கட்சியினரும் பல தொகுதிகளில் கரும்பு விவசாயி சின்னத்தை முன்வைத்து பிரசாரம் செய்தனர். ஆனால் கர்நாடகா லெட்டர் பேடு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் நீதிமன்றங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது.

நீதிமன்றங்களில் சீமான் கட்சி நிர்வாகிகள் எவ்வளவோ முயன்றும் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஒருவழியாக ஒலிவாங்கி எனப்படும் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. சென்னையில் சீமான் இதனை அறிமுகம் செய்து வைத்ததுடன் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.
சீமான் கட்சிக்கு மைக் சின்னம் கிடைத்த உடனே முதல் ஆதரவை இயக்குநர் சேரன் தெரிவித்திருந்தார். "இனிமேல் இந்தியாவில் எவரும் சீமானின் இந்த சின்னம் இல்லாமல் ஓட்டுக்கேட்டு போகமுடியாது... எல்லா கட்சி மேடைகளிலும் நாம் தமிழர் சின்னம் இருக்கும்.. எல்லா 'மைக்' கின் மூலமும் முழங்குவோம்.. ஊ"மைக்"கூட்டத்தின் விழிப்புணர்வுக்கு தோழ"மைக்"கூட்டம் எதுவென்று.." என இயக்குநர் சேரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து கொண்டே பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் நடிகர் எஸ்.வி.சேகர் மைக் சின்னத்துடனான தமது படத்தை நேற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதனால் சீமான் கட்சியை எஸ்வி சேகர் ஆதரிக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்தது.

தற்போது தமது எக்ஸ் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் எஸ்.வி.சேகர். அதில், "முதன் முதலில் 1969ல் சென்னை விவித பாரதியில் வந்த முதல் விளம்பரம் இந்த SHURE mikeல் தான் ரெகார்ட் செய்தேன். ரஜினி குரலை முதன் முதலில் அபூர்வ ராகங்களுக்காக இந்த மைக்கில்தான் பதிவு செய்து ஒலிபரப்பினேன். நான் 1974 ல் நடித்த முதல் மேடை கண்ணாமூச்சி நாடத்திலும் இதே ஷுயூர் மைக்தான் என்று பதிவிட்டிருக்கிறார். லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்விக்கு விடை சொல்லாமல் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' (அவரது நாடகத்தின் பெயரும் கூட) ஆட்டம் நாம் தமிழர் கட்சியினரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications