எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்த அமித்ஷா! ஜேபி நட்டாவுடனும் ஆலோசனை- பதற்றத்தில் தமிழ்நாடு பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒருநாள் பயணமாக டெல்லி செல்கிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக முக்கியமான கட்சியாக இடம் பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது.

Lok Sabha Election: Edappadi Palaniswami to meet Amit Shah, JP Nadda today

9 தொகுதிகள் விவகாரம்:ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியின் கீழ்தான் பாஜக உள்ளது. இருந்த போதும் அதிமுகவை தமிழ்நாடு பாஜக தலைவர்கள் தொடர்ந்து சீண்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தாமலேயே 9 தொகுதிகளை கையில் எடுத்து தேர்தல் பணிகளை செய்தும் வருகிறது பாஜக. இதற்கு அனுமதித்தது போல டெல்லி மேலிடமும் மத்திய அமைச்சர்களையும் இந்த 9 தொகுதியில் பிரசாரம் செய்ய அனுப்பி வைத்துள்ளது. இது அதிமுகவை கடும் அதிருப்தி அடைய செய்திருக்கிறது.

அதிமுக அதிருப்தி: பொதுவாக தேர்தல் நேரங்களில் அதிமுகவின் தலைமையுடன் ஆலோசிக்காமல் இப்படி தொகுதிகளை தன் வசமாக்கிக் கொள்வதும் பின்னர் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் மல்லுக்கட்டுவதும் பாஜகவின் வாடிக்கை. ஆனால் அதிமுகவோ இப்படியே ஒவ்வொரு முறையும் அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளதாம்.

Lok Sabha Election: Edappadi Palaniswami to meet Amit Shah, JP Nadda today

தமிழக பாஜக மீது புகார்: இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாடு கள நிலவரம், தமிழ்நாடு பாஜக தலைவர்களின் போக்கு ஆகியவை தொடர்பாக விவாதிக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு பாஜக தலைவர்கள், அதிமுகவுடன் மோதல் போக்கை தொடர்ந்து கடைபிடிப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் ஜேபி நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.

டெல்லி அலுவலகம்: மேலும் டெல்லியில் அண்ணா திமுக அலுவலகத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்த அலுவலகத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கான தேதியை அமித்ஷா மூலம் பெறவும் இந்த சந்திப்பை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்துவார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+